கர்ப்பிணி நாய் மீது மோதிய கார்..! துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்! வயிற்றை கிழித்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி!

வேலூரில் விபத்தில் சிக்கி உயிரிழந்த நாய் ஒன்றின் வயிற்றில் இருந்து ஐந்து குட்டிகள் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் நெகிழ்ச்சி கரமான ஒன்றாக மாறியுள்ளது.


வேலூரில் அமைந்திருக்கும் சாலையில் ஒரு சென்று கொண்டிருந்த நாய் திடீரென்று சாலையை கடக்க முயற்சித்தது. அப்போது அவ்வழியே வந்த கார் நாயின் மீது மோதியது. இந்த விபத்தில் சிக்கிய நாய் பரிதாபமாக துடிதுடித்து கொண்டிருந்தது.

அவ்வழியே வந்த தண்டபாணி என்பவர் நாய் துடிதுடிப்பதை பார்த்து பதறி இருக்கிறார் உடனே அந்த நாயை தூக்கி அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார். அப்படியாக கால்நடை மருத்துவர் ரவிசங்கர் என்பவரிடம் அந்த நாயை அழைத்துக்கொண்டு சென்றார் தண்டபாணி.

நாயைப் பரிசோதித்த மருத்துவர் அதற்கு தேவையான சிகிச்சைகளை அளித்தார் இருப்பினும் அந்த நாய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. அடிபட்டு உயிரிழந்த அந்த பெண் நாய் கர்ப்பமாக இருந்தது கண்டு கொண்ட ரவிசங்கர் உடனடியாக அதனுடைய வயிற்றைக் கிழித்து அதனுள் இருந்த ஐந்து குட்டிகளை பத்திரமாக மீட்டு எடுத்தார்.

பின்னர் பேசிய கால்நடை மருத்துவர் ரவிசங்கர் இந்த சம்பவத்தை பற்றித் தன்னுடைய கருத்துகளை பதிவு செய்தார். அதாவது பொதுவாகவே நாய் உயிரிழந்த ஒரு சில நிமிடங்களிலேயே அதன் வயிற்றில் இருக்கும் குட்டிகளும் ஆக்சிஜன் இல்லாமல் இறந்து விடும் . 

ஆனால் அறுவை சிகிச்சை செய்து நாய்க்குட்டிகளை வெளியே எடுக்க சுமார் ஐந்து நிமிடத்திற்கும் மேல் ஆனது . இருப்பினும் அந்த நாய் குட்டிகள் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.