பிக்பாஸ் வீட்டில் பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை! வெளியேறிய போட்டியாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை தமிழில் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் . இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக ஏழாவது வாரத்திற்குள் நுழைந்துள்ளது .


இதேபோல தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார் . இந்த நிகழ்ச்சியில் குணச்சித்திர நடிகை ஹேமா முதலாவதாக எவிக்சன் செய்யப்பட்டு  பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் .

பல முன்னணி ஹீரோக்களுடன் 30 வருடங்களாக நடித்து வரும் நடிகை ஹேமா பிக்பாஸ் வீட்டைப் பற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் . கடந்த 30 வருடங்களாக  சினிமா துறையில் நான் பார்த்து மற்றும்  கற்றுக்கொண்ட விஷயங்களும் ,இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் நடிகைகளின் உண்மையான வாழ்க்கை முறையையும்,நான் கற்றுக்கொண்ட விஷயங்களையும்  ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது .இது முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது என்றும் நடிகை ஹேமா கூறியுள்ளார் .

மேலும் நடிகை ஹேமா,  பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் மூலம் போட்டியில் பங்குபெறும்  பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை செய்யப்படுவதாக நடிகை ஹேமா  கூறியுள்ளார். நடிகை ஹேமா கூறியுள்ள இந்த பரபரப்பான  கருத்தின் மூலம் தெலுங்கு திரையுலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது.

தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனம் தான் தமிழிலும் நடத்துகிறது. எனவே தமிழ் பிக்பாஸ் வீட்டிலும் கர்ப்ப பரிசோதனை நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.