இந்த கோவிலின் ஒரே ஒரு எலுமிச்சை பழம் போதும்! உங்கள் எதிர்காலம் சிறக்கும்..!

கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரத்திலிருந்து வடக்கே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பிளாஞ்சேரி என்ற தலம்.


இங்கே அருள்மிகு காமாட்சியம்மன் சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு கைலாசநாதர். இந்தக் கோயிலில் தனித்தனிச் சன்னதிகளில் அஷ்ட பைரவர்களும் அருள்பாலிக்க, சரபசூலினியும் குடிகொண்டிருக்கிறாள்.

பிரளய காலத்தில் அனைத்து ஜீவராசிகளையும் ரட்சிக்கத் திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான். எனவே சப்தரிஷிகளை அழைத்து தவம் மேற்கொள்ளும் படி கூறினார் அப்பொழுது அத்ரி மஹரிஷியின் மகனான பிராச முனிவர், தாமும் சப்தரிஷிகளோடு சேர்ந்து தவமியற்ற விரும்பினார். அதற்கு சிவபெருமானின் அனுமதியை வேண்டினார். ஆனால் அவருடைய முன்வினைகள் முழுவதும் தீரவில்லை என்பதால் அவர் தவமியற்றுவதற்குச் சிவபெருமான் அனுமதிகவில்லை.

இதனால் மனம் வருந்திய பிராச முனிவர், தன்னுடைய முன்வினைகள் தீருவதற்கு ஒரு வழி கூறி அருளும்படி சிவபெருமானைப் பிரார்த்தித்தார். சிவ பெருமானும் மனம் இரங்கி அவரைப் பிராச வனஞ்சேரி என்ற பகுதிக்குச் சென்று அந்தத் தலத்திலுள்ள காமாட்சியம்மன் சமேத கைலாசநாதரை வழிபடும் பாடி அருள்பாலித்தார். அத்துடன் அந்தத் தலத்தில் சரப சூலினியைப் பிரதிஷ்டை செய்து தொடர்ந்து ஆயிரம் பௌர்ணமிகள் ஜயமங்களா யாகம் செய்து முடித்தால் முனிவரின் முன்வினைகள் முழுவதும் நீங்கும். சப்த ரிஷிகளுக்கும் மேலான பதவியை அடையலாம் என்றும் அருளினார்.

சிவபெருமானைப் போற்றி துதித்த பிராச முனிவர் இந்தத் தலத்துக்கு வந்து பதினெட்டு திருக்கரங்களுடன் கூடிய சரப சூலினியைப் பிரதிஷ்டை செய்து, ஆயிரம் ஜயமங்களா யாகம் செய்து வழிபட்டார். அதன் பலனாக அவரின் முன்வினைகள் நீங்கின. சப்த ரிஷிகளுக்கும் மேலானவராகதி திகழும் பெரும்பேறும் கிடைத்தது.

பௌர்ணமிதோறும் மாலை 5 மணியளவில் ஜயமங்களா மகாயாகம் நடைபெறும். அப்போது பிராச முனிவரும் சூட்சும வடிவில் வந்து அம்பிகையே வழிபடுவதாக ஐதீகம். பக்தர்கள் தாங்கள் தொடங்கும் காரியங்கள் தொடர்பாக அம்பிகையின் உத்தரவு கேட்க வருவார்கள். அவர்கள் கொண்டுவரும் எலுமிச்சம்பழம் அம்பிகையின் திருமுடியில் வைக்கப்படும். காரியத்தை தொடங்கலாம் என்பது அன்னையின் சித்தமானால் அந்த எலுமிச்சை அம்பிகையின் திருமுடியிலிருந்து தானாகவே இறங்கி விழுவது, இத்தலத்துக்குரிய அற்புதமாகும்.

அதேபோல் இங்கு நடைபெறும் ஜயமங்களா யாகத்தில் கலந்து கொண்டால் திருஷ்டி தோஷங்கள் அகலும். திருமணத்தடை நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும். வம்ச விருத்தி உண்டாகும். இழந்த பதவியை மீண்டும் பெறலாம் என்பது நம்பிக்கை.