45 வயது இளம் தலைவர் கோவா புதிய முதலமைச்சராக தேர்வு! விரைவில் பதவி ஏற்கிறார்!

மனோகர் பாரிக்கரின் மறைவைத் தொடர்ந்து கோவா புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மனோகர் பாரிக்கர் நேற்று திடீரென காலமானார். கோவா பானர்ஜி கள் மனோகர் பாரிக்கரை உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கோவா புதிய முதலமைச்சரை தேர்வு செய்யும் பணியில் பாஜக தீவிரம் காட்டியது. இறுதியில் தற்போதைய கோவா சட்டப்பேரவை சபாநாயகர் டாக்டர் பிரமோத் சாவந்த் புதிய முதலமைச்சராக அக் கட்சியின் மேலிடம் தேர்வு செய்துள்ளது.

ஆயுர்வேத மருத்துவரான இவர் முதல் முறை பாஜக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம்எல்ஏவான முதல் முறையிலேயே பிரமோத் சாவந்த்திற்கு முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இன்று இரவே பிரமோற்சவம் கோவா முதலமைச்சராக பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரமோத்திற்கு 45 வயது மட்டுமே ஆகிறது.