நாங்க பிறந்து ஒரு வருசம் ஆச்சு! இப்போது வைரலாகும் சின்னத்திரை தம்பதியின் இரட்டை பெண் குழந்தைகள்..! யார் தெரியுமா?

சின்னத்திரையில் நடித்து பிரபலமான பிரஜன் மற்றும் சான்ட்ரா ஜோடி தங்களுடைய இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.


பிரபல தனியார் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சான்ட்ரா ஆவார். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து வந்த பிரஜனை திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி பத்து வருடங்களுக்கு பின்பு இரட்டை குழந்தை பிறந்தது. 

இதுவரை தங்களது இரட்டை குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிடாமல் இருந்த இந்த ஜோடி தற்போது தங்களது இரட்டை குழந்தைகளின் முதலாவது பிறந்த நாளை முன்னிட்டு அவர்களது புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். ஆனால் இந்த புகைப்படத்தில் இரண்டு குழந்தைகளும் பின்னால் திரும்பி நிற்பது போல உள்ளது.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பிரஜன் தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக குழந்தைகளின் பிறந்தநாளை கொண்டாட நான் பிளான் ஏதும் போடவில்லை. குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு குழந்தைகளின் முகம் தெரிவது போன்ற புகைப்படத்தை வெளியிடுவேன் என்று அதில் அவர் கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.