பூட்டிய அறைக்குள் பெண் டாக்டர் பிரதீபாவின் சடலம்..! கொரோனாவும் இல்லை! தற்கொலையும் இல்லை! எப்படி இறந்தார்? பதற வைக்கும் தகவல்கள்!

பயிற்சி மருத்துவர் ஒருவர் தன்னுடைய அறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவமானது கீழ்ப்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரதீபா என்ற பெண் இறுதியாண்டு மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளார். இவர் தற்போது அதே மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருடைய தந்தையின் பெயர் ரமேஷ். இவர் வேலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் நிறுவனம் நடத்தி வருகிறார்.

ஏப்ரல் 16-ஆம் தேதி முதல், கொரோனா ஊரடங்கு காரணமாக அதே மருத்துவமனை விடுதியில் அறை எண் 6-ல் தங்கி வந்துள்ளார். நேற்று இவர் காலையில் மருத்துவப்பணிக்கு சென்றுள்ளார். நேற்றிரவு 8 மணி வரைக்கும் பணியிலிருந்த இவர், சக மருத்துவர்களுடன் மகிழ்ச்சியாக பேசிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார்.

இன்று காலை 8 மணி வரைக்கும் அவருடைய வீட்டின் கதவுகள் திறக்கப்படவில்லை. இதனால்அதிர்ச்சி அடைந்த அவருடைய தோழிகள் அவருடைய அறைக்கதவை நீண்ட நேரத்திற்கு தட்டி பார்த்துள்ளனர். ஆனால் பிரதீபா எந்தவித பதிலும் அளிக்கவில்லை. 

உடனடியாக அந்த விடுதியின் மெய்க்காப்பாளர்கள் அழைத்து கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்துள்ளனர். அப்போது மயங்கிய நிலையில் சுய நினைவை இழந்து பிரதீபா கிடந்துள்ளார். உடனடியாக மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பார்த்தனர்.

அப்போது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். உடனடியாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் பிரதீபாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். 

பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்ய காவல்துறையினர் அறிவுறுத்தினர். காவல்துறையினர் நெருங்கிய மருத்துவர்களிடமும், அவருடைய செல்போன் மூலமும் முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர். ஆனால் அவை எந்த அளவிற்கும் பயனளிக்கவில்லை‌. அன்றிரவு தங்களிடமும் பிரதீபா நன்றாக பேசிவிட்டு தான் உறங்கச் சென்றார் என்றும் அவருடைய பெற்றோர் கூறியுள்ளனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகு தீர்மானமாக ஒரு முடிவு எடுக்கலாம் என்று காவல்துறையினர் காத்து கிடந்தனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையானது அவர்களை மேலும் குழப்பமடைய செய்துள்ளது. பிரதீபா தற்கொலை செய்து கொண்டதற்கு கூட பிரேத பரிசோதனையில் எந்தவித தடயங்களும் கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். எனவே பிரதீபா எவ்வாறு இறந்திருப்பார் என்று கண்டுபிடிக்க இயலாமல் காவல்துறையினர் சிரமப்பட்டு வருகின்றனர். 

இந்த சம்பவமானது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.