பூட்டிய அறைக்குள் சடலமாக கிடந்த இளம் பெண் டாக்டர் பிரதீபா..! வெளியானது பிரேதப்பரிசோதனை அறிக்கை! கொரோனாவுக்கு சிகிச்சை அளித்தது காரணமா?

பயிற்சி மருத்துவர் ஒருவர் தன்னுடைய அறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவமானது கீழ்ப்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரதீபா என்ற பெண் இறுதியாண்டு மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளார். இவர் தற்போது அதே மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருடைய தந்தையின் பெயர் ரமேஷ். இவர் வேலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் நிறுவனம் நடத்தி வருகிறார்.

ஏப்ரல் 16-ஆம் தேதி முதல், கொரோனா ஊரடங்கு காரணமாக அதே மருத்துவமனை விடுதியில் அறை எண் 6-ல் தங்கி வந்துள்ளார். நேற்று இவர் காலையில் மருத்துவப்பணிக்கு சென்றுள்ளார். நேற்றிரவு 8 மணி வரைக்கும் பணியிலிருந்த இவர், சக மருத்துவர்களுடன் மகிழ்ச்சியாக பேசிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார்.

இன்று காலை 8 மணி வரைக்கும் அவருடைய வீட்டின் கதவுகள் திறக்கப்படவில்லை. இதனால்அதிர்ச்சி அடைந்த அவருடைய தோழிகள் அவருடைய அறைக்கதவை நீண்ட நேரத்திற்கு தட்டி பார்த்துள்ளனர். ஆனால் பிரதீபா எந்தவித பதிலும் அளிக்கவில்லை. 

உடனடியாக அந்த விடுதியின் மெய்க்காப்பாளர்கள் அழைத்து கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்துள்ளனர். அப்போது மயங்கிய நிலையில் சுய நினைவை இழந்து பிரதீபா கிடந்துள்ளார். உடனடியாக மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பார்த்தனர்.

அப்போது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். உடனடியாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் பிரதீபாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். 

பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்ய காவல்துறையினர் அறிவுறுத்தினர். காவல்துறையினர் நெருங்கிய மருத்துவர்களிடமும், அவருடைய செல்போன் மூலமும் முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே பிரேதப்பரிசோதனை அறிக்கையில் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதே போல் அவர் கொரோனா பாதிப்பில் உயிரிழக்கவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மருத்துவர் எப்படி உயிரிழந்தார் என்பதில் பிரேதப்பரிசோதனை அறிக்கை வெளியான நிலையிலும்குழப்பம் நீடிக்கிறது.