கடத்தல்காரர்களிடம் மனைவியை அடகு வைத்துவிட்டு தப்பிய பிரபல தமிழ் நடிகர்!

பிரபல நடிகர்


பிரபல நடிகர் ஒருவர் தன்னை கடத்திச் சென்றவர்களிடம் தனது மனைவியை வரவழைத்து அடகு வைத்துவிட்டு தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   லத்திகா எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் சீனிவாசன். தனக்கு தானே பவர் ஸ்டார் என்கிற பட்டத்தை சூட்டிக் கொண்டு தான் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு போட்டி என்று அறிவித்துக் கொண்டு வலம் வந்தார். கண்ணா லட்டு திங்க ஆசையா படம் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பவர் ஸ்டார் சீனிவாசன் பிரபலம் ஆனார். மேலும் தனது சொந்த பணத்தை ஏராளமான செலவு செய்து தனக்கு தானே விளம்பரங்களும் செய்து வந்தார்.

   இந்த நிலையில் கடந்த 2012ம் ஆண்டு முதல் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு சோதனை காலம் ஆரம்பமானது- தன்னை டாக்டர் என்று கூறிக் கொண்டு அண்ணா நகரில் சீனிவாசன் மருத்துவமனை நடத்தி வந்தார். பிறகு தான் அவர் எம்.பி.பி.எஸ் படிக்காதவர் என்று தெரியவந்தது- மேலும் சென்னை, ஐதராபாத், பெங்களூர், மும்பை, டெல்லி என பல்வேறு நகரங்களில் தொழில் அதிபர்களுக்கு கோடிக்கணக்கில் கடன் வாங்கித் தருவதாக கூறி லட்சங்களில் கமிசன் வசூல் செய்துள்ளார்.

   இவரை நம்பி பலர் ஒரு கோடி ரூபாய் வரை கூட கமிசன் கொடுத்தனர். ஆனால் சொல்லியபடி பவர் ஸ்டார் கடன் வாங்கி கொடுக்காத காரணத்தினால் காவல் நிலையங்களில் வழக்கு பதிவானது. இந்த வழக்குகளில் கைதாகி டெல்லி திகார் சிறை வரை சென்று திரும்பினார் பவர் ஸ்டார் சீனிவாசன். அந்த வகையில் சீனிவாசன் பெற்ற பல்வேறு கமிசன் தொகைகள் இன்னும் செட்டில் செய்யாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் பெங்களூரை சேர்ந்த ஆலன் என்ற தொழில் அதிபருக்கு பல கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி 90 லட்சம் ரூபாய் பெற்ற பவர் ஸ்டார்ன் அதன் பிறகு தொழில் அதிபரை கண்டுகொள்ளவில்லை. இதனால் புதிய பட வாய்ப்பு தருவதாக பெண் ஒருவர் மூலம் ஏமாற்றி பவர் ஸ்டாரை கோயம்பேடு வரவழைத்த ஆலன் அங்கிருந்து அவரை உதகைக்கு கடத்திச் சென்றார். மேலும உதகையில் பவர் ஸ்டார் பெயரில் உள்ள சொத்தை தனக்கு எழுதித்தருமாறு ஆலன் மிரட்டியுள்ளார்.

   இந்த நிலையில் சொத்து தனது பெயரில் இல்லை என்று தனது மனைவி பெயரில் உள்ளதாகவும் பவர் ஸ்டார் கூறியுள்ளார். இதனை நம்பால் பவர் ஸ்டாரை இரண்டு நாட்கள் அங்கு வைத்து ஆலன் உள்ளிட்டோர் அடித்து துவைத்துள்ளனர். பின்னர் தனது மனைவியை வரவழைத்து சொத்தை எழுதித்தருவதாக பவர் ஸ்டார் கூறியுள்ளார். இதனை அடுத்து பவர் ஸ்டார் தனது மனைவி ஜுலியை உதகை வரவழைத்துள்ளார்.

   மனைவி ஜூலி அங்கு சென்றதும் சொத்து ஆவணங்கள் சென்னையில் உள்ளதாகவும் அதனை எடுத்து வருவதாகவும் அது வரை தனது மனைவி ஜூலியை அடகாக வைத்துக கொள்ளுமாறும் பவர் ஸ்டார் கூறியுள்ளார். மனைவியையே அடகாக வைப்பதாக பவர் ஸ்டார் கூறியதால் ஆலன் அவர் பேச்சை நம்பியுள்ளார். ஆனால் சென்னை சென்ற பவர் ஸ்டார் தனது மனைவியை ஆலன் கடத்தி வைத்துள்ளதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

   இதன் பிறகு போலீசார் நடவடிக்கை எடுத்து ஜூலியை மீட்டனர். ஆனால் கடத்தல் நாடகம் ஆடியதாக தற்போது பவர் ஸ்டார் மீதே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடத்தல்காரர்களிடம் தனது மனைவியை அடகு வைத்துவிட்டு வந்த பவர் ஸ்டார் பலே ஆள் தான் என்கிறார்கள் திரையுலகில்.