எடப்பாடி பழனிசாமியையும் ஸ்டாலினையும் ஒப்பிட்டு போஸ்டர்கள்! மக்களிடையே நல்ல வரவேற்பு! கிழித்து எறியும் தி.மு.க. குண்டர்கள்..

தமிழகம் எங்கும் எடப்பாடி பழனிசாமியையும் ஸ்டாலினையும் ஒப்பிட்டு போஸ்டர்களை அ.தி.மு.க.வினர் ஒட்டிவருகின்றனர். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்துவருகிறது.


குறிப்பாக, ‘மண்ணின் மைந்தரா அல்லது மன்னரின் வாரிசா’, ’உழைப்பை நம்பலாமா… பிழைப்பை நம்பலாமா’, ‘மக்கள் நாயகனா… உளறல் நாயகனா’ என்று தமிழகம் முழுவதும் ஒட்டப்படும் போஸ்டர்களை மக்கள் நின்று பார்த்து சிரித்து, சிந்தித்துச்செல்கின்றனர்.

இதைக் கண்டு ஆத்திரமடையும் தி.மு.க.வினர் ஒட்டப்பட்ட போஸ்டர்களை ஆங்காங்கே கிழித்துவருகின்றனர். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் படங்களுடன் ஸ்டாலினை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை கோவையில் தி.மு.கவினர் கிழித்து எறிந்தனர்.

இதைக் கண்டு அ.தி.மு.க.வினர் கோபம் அடைந்தாலும், அதற்காக டென்ஷன் ஆகாமல் மீண்டும் மீண்டும் போஸ்டர்களை ஒட்டவே, அதிர்ந்து நிற்கிறது தி.மு.க. கும்பல்.