பெண் டாக்டர் வழக்கில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேருக்கும் குண்டு பாய்ந்தது எங்கு தெரியுமா? வெளியானது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்!

கால்நடை மருத்துவரின் பலாத்கார வழக்கில் என்கவுண்டர் செய்யப்பட்ட 4 இளைஞர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்னர் 26 வயதான பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை மருத்துவர், 4 லாரி ஓட்டுநர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவமானது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சென்ற வாரத்தில் 4 குற்றவாளிகளும் எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களை நோக்கி குற்றவாளிகள் தாக்க முயன்றதால் தற்காப்புக்காக என்கவுண்டர் செய்ததாக காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். சிலர் காவல்துறையினர் நாடகமாடி இந்த என்கவுண்டர் சம்பவத்தை அரங்கேற்றி தவறாக கருத்துக்கள் கூறியிருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக மனித உரிமைகள் ஆணையம் கூறினர். இந்நிலையில் 4 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை மருத்துவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் பல அதிர்ச்சிகர தகவல்களும் வெளியாகியுள்ளன.

அதாவது, 4 பேரின் உடல்களிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தாலும் அவர்கள் உடம்பில் குண்டுகள் தங்கவில்லை. முக்கிய குற்றவாளியான முகமதின் உடலில் 4 குண்டுகளும், சின்னகேசவலு மற்றும் சிவா ஆகியோரின் உடல்களில் 3 குண்டுகளும், நவீனின் உடலில் ஒரு குண்டும் பாய்ந்துள்ளன.

மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து சம்பவ இடத்தில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.