அந்த தொழிலில் வருமானம் இல்லை..! அதனால் தான் இந்த தொழில்..! வெளிப்படையாக ஒப்புக் கொண்ட பெண் பிரபலம்! யார், என்ன தெரியுமா?

அந்தத் தொழிலில் சரியான வருமானம் இல்லை என்றுதான் ஆபாச நட்சத்திரமாக மாறினேன் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரெனீ கிரேசி மனம் திறந்து கூறியிருக்கிறார்.


ஆஸ்திரேலியாவை சேர்ந்த பந்தயக் கார் ஓட்டுனராக இருந்து வந்தவர் ரெனீ கிரேசி. 25 வயதாகும் இவர் கார் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பதை தன் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரெனீ கிரேசி திடீரென ஆபாச நட்சத்திரமாக உருவெடுத்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது . எதற்காக இவர் திடீரென்று ஆபாச நட்சத்திரமாக மாறினார் என்று அவர்களனைவரும் குழம்பிப் போனார்கள். 

அவர்களின் குழப்பத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ரெனீ கிரேசி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவர் வீடியோ பதிவு மூலமாக தனது வாழ்வில் ஏற்பட்ட சம்பவங்கள் பற்றியும் எதற்காக தன்னுடைய கரியரையே மாற்றிக் கொண்டார் என்பதை பற்றியும் விளக்கமாக கூறியிருக்கிறார். இன்னும் இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை, அதற்குள் நான் நிறைய பணத்தை சம்பாதித்து விட்டேன். இந்த இரண்டு மாத முடிவில் நான் சம்பாதித்த பணம் ஆறு இலக்கங்களை தொட்டுவிடும். இந்தத் தொழில் மூலம் எனக்கு பணம் கிடைப்பது எனக்கு பிடித்திருக்கிறது. 

அந்தப் பணம் எனக்கு நன்றாக இருந்தது ஆகையால் நான் அதை நீண்ட நேரமாக செய்ய ஆரம்பித்துவிட்டேன். மக்கள் பலரும் என்னைப் பற்றி பேசுவதன் மூலமாக நான் வருத்தப்படுவேன் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை. அதை செய்தால் அவள் வசதியாக இருப்பாள், மேலும் அதை செய்தாள் அவள் சந்தோஷமாக இருப்பாள் என்றால் அதை செய்ய வேண்டியது தானே. கடந்த காலத்தை என் எதிர்கால வழிகளில் கொண்டு செல்ல நான் அனுமதிக்கிறேன் என்று ரெனீ கிரேசி அந்த வீடியோ பதிவில் கூறியிருந்தார். இவரது இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.