பெண்களுக்கு வளரக்கூடாத இடத்தில் வளர்ந்த முடி..! அதையும் கூச்சமே இல்லாமல் வீடியோ எடுத்து வெளியிட்ட டிவி தொகுப்பாளினி..!

ஊரடங்கு உத்தரவால் அழகு நிலையங்கள் திறக்கப்படாததை அடுத்து பிரபல யூடியூபர் விஜே பார்வதி வெளியிட்டுள்ள புதிய வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது


சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தொற்று தற்போது உலகமெங்கும் பரவி தன்னுடைய கோர தாண்டவத்தை காட்டி வருகிறது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்த வைரஸ் தொற்றுலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இந்திய அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவால் சினிமா படப்பிடிப்புகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நடிகை நடிகைகள் சின்னத்திரை நடிகர்கள் என பலரும் தங்களுடைய வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றன நாள் முழுவதும் ஆக்டிவாக இருந்த அவர்கள் தற்போது வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் புதுவித பாணியில் தங்களுடைய ரசிகர்களை உற்சாகப் படுத்த ஆரம்பித்து விட்டனர்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எந்த ஒரு கடையும் திறக்கப்படவில்லை. அப்படியே கடைகள் திறந்தாலும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கடைகள் இரண்டு மணி நேரம்தான் நாளொன்றுக்கு திறக்கப்படுகிறது. நடிகர்கள் அதிகமாக பயன்படுத்தும் அழகு நிலையங்கள் திறக்கப்பட வில்லை என பலரும் வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் பிரபல யூடியூப் சேனலான கலாட்டா தமிழ் சேனலில் தொகுப்பாளினியாக இருக்கும் VJ பார்வதி சமூகவலைத்தள பக்கத்தில் பியூட்டி பார்லர் இல்லாததால் முகத்தில் மீசை முளைத்து விட்டதாக சோகத்தில் இருக்கிறாராம். அது மட்டுமில்லாமல் எல்லா பெண்களும் இப்போது மீசை மச்சான்களாக மாறி விடுவார்கள். ஆகையால் எந்தப் பெண்ணையும் எந்த ஆணும் பார்க்க மாட்டார்கள் எனவும் அவர் வருத்தத்துடன் பதிவிட்டிருக்கிறார். 

அது மட்டுமில்லாமல் பெண்களை பெண்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறும்புத் தனத்துடன் கூறியிருக்கிறார். ஆகையால் தயவுசெய்து பியூட்டிபார்லர்களை திறக்குமாறு அவர் கூறியிருக்கிறார்.பார்வதி வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.