மகளுக்கு திருமணமாகி 3 வருடம்..! மனைவி இறந்து 2 வருடம்..! பிரபல தயாரிப்பாளர் 2வது திருமணம்..! பெண் யார் தெரியுமா?

மனைவி இறந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் பிரபல தயாரிப்பாளர் ராஜு நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.


தெலுங்கு மொழியில் வெளியான சிறந்த திரைப்படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக வலம் வருகிறார் தில் ராஜு. இவர் தயாரித்த தில் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் இவர் தில் ராஜு என்று பலராலும் அழைக்கப்படுகிறார். இவரது முதல் மனைவி பெயர் அனிதா. கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பாக அவர் இயற்கை எய்தினார். தயாரிப்பாளர் ராஜூவுக்கு மகள் ஒருவர் இருக்கிறார். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று தற்போது ஒரு குழந்தையும் உள்ளது.

 

49 வயதாகும் தயாரிப்பாளர் ராஜு மனைவியின் பிரிவுக்குப் பின்னர் தனிமையில் வசித்து வந்திருக்கிறார். தன் தந்தை தனிமையில் வாடுவதை பார்த்த அவரது மகள் அவருக்கு மற்றொரு துணையை தேடி தருவதற்கு முயற்சி செய்திருக்கிறார். இந்நிலையில் நடுத்தர வயது பெண் ஒருவரை தன்னுடைய தந்தைக்கு தானே முன்நின்று திருமணமும் செய்து வைத்திருக்கிறார். இந்நிலையில் தில் ராஜூ , தேஜஸ்வினி என்ற நடுத்தர வயது பெண்ணை நேற்றிரவு நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள, நரசிங்கம்பள்ளியில் இருக்கும் வெங்கடேஷ்வரா கோயிலில்  நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். கொரோனா அச்சத்தால் திரைத்துறையில் இருந்து எந்த பிரபலங்களும் திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை. மகள் மற்றும் பேத்தி கண்முன்னே தயாரிப்பாளர் தில் ராஜூவின் இரண்டாவது திருமணம் நல்ல முறையில் நடந்து முடிந்தது.

தயாரிப்பாளர் ராஜு தொடர்ந்து ஆர்யா, பத்ரா, பொம்மரில்லு, முன்னா, பிருந்தாவனம், மிஸ்டர் பெர்ஃபக்ட், ஃபிடா, ஜானு போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்து பிரபலமான தயாரிப்பாளராக வலம் வருகிறார். தமிழில் வெளியான 96 திரைப்படத்தை தெலுங்கில் தயாரித்தவர் இவர்தான். ஆனால் அந்த திரைப்படம் இவர் எதிர்பார்த்த வெற்றியை உறுதி தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.