டைரக்டருக்கு 62 வயசாயிடுச்சுனு நினைச்சேன்..! ஆனால் அவர்..? வீட்டுக்கு கூட்டிட்டு போய்.! இளம் நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..!

ஹீரோயின் வாய்ப்பு தருவதாகக் கூறி பிரபல இயக்குனர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம் நடிகை ஒருவர் புகார் அளித்திருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் கமல் ஆவார். இவர் மலையாள சினிமாவில் ஜாம்பவான்களாக வலம்வரும் மம்மூட்டி, மோகன்லால், திலீப், ஜெயராம், பிருத்விராஜ் ஆகியோரை வைத்து பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இந்த இயக்குனருக்கு ரசிகர்களின் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ், இந்தி போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களை இயக்கி மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்து இருக்கிறார்.

தமிழில் கடந்த சில ஆண்டுகளுக்கு 

முன்பு நடிகை ஷாலினி மற்றும் பிரசாந்த் ஆகியோர் இணைந்து நடித்த பிரியாத வரம் வேண்டும் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். ஹிந்தி சினிமாவில் அஜய்தேவ்கன் நடித்த பிரபல திரைப்படத்தையும் இயக்கி ஹிந்தி ரசிகர்களை தன் வசப்படுத்தினார். தற்போது மலையாள திரைப்படங்களிலேயே கவனம் செலுத்தி வரும் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டில் பிரபல நடிகை மஞ்சு வாரியர், கோபி ஆகியோர் நடித்த ஆமி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

இயக்குனர் கமல் ஆமி திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்த பொழுது அவர் இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் தனக்கு கதாநாயகி கதாபாத்திரம் அளிப்பதாக கூறி தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மலையாள சினிமாவை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் பரபரப்பு புகார் அளித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இயக்குனர் கமல் தன்னை அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்று தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் படப்பிடிப்பு தளங்களிலும் தன்னிடம் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் அந்த நடிகை கூறியிருப்பது மலையாள சினிமா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நான் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை உடைத்து எறிந்து விட்டார் என்று கூறிய நடிகை அவர் ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய் என்று மிகவும் கோபத்துடன் இயக்குனர் கமலை சாடியிருக்கிறார். இதுகுறித்து அந்த நடிகை வழக்கு பதிவு செய்து இயக்குனர் கமலுக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பி இருக்கிறார். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி சினிமா ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரிடம் இருந்து பல வகையான விமர்சனங்கள் இயக்குனர் கமல் மீது எழுந்துள்ளது.

இதனையடுத்து இந்த செய்தி குறித்து இயக்குனர் கமலிடம் கேட்டபொழுது, இது முற்றிலும் பொய்யான புகார் ஆகும் என் பெயரைக் கெடுப்பதற்காக நடத்தப்படும் பிரச்சாரம் இது என அவர் விளக்கமளித்துள்ளார். கேரள மாநிலத்தின் கலாசேத்திரா அகாடமியின் சேர்மனாக நான் இருந்து வருகிறேன். இந்த பதிவில் நான் இருப்பதை பிடிக்காத ஒரு சிலர் என் மீது இம்மாதிரியான பொய் புகார்களை சுமத்தி வருகின்றனர். எனக்கு வக்கீல் நோட்டீஸ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வந்தது . ஆனால் சமீபத்தில் இம்மாதிரியான எந்த ஒரு நோட்டீசும் எனக்கு வரவில்லை. இது முற்றிலும் பொய்யான புகார் என்பதால் இதைப் பற்றி நான் கவலைப்பட போவதில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இயக்குனர் கமல் இதனை பொய் புகார் என்று மறுத்து வந்தாலும் தற்போது இந்த செய்தியானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.