ரொம்ப கேவலமா கேட்குறானுங்க..! அந்த உறுப்பு போட்டோ அனுப்புறானுங்க..! குடும்ப நடிகைக்கு ஏற்பட்ட அனுபவம்!

மலையாள நடிகை அனுமோலின் வலைதள பக்கங்களில் ஆபாசமாக பேசி பதிவுகளை வெளியிட்ட நெட்டிசன்களை விளாசித் தள்ளி இருக்கிறார்.


தமிழ், மலையாளம், வங்காளம் என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை அனுமோல். இவர் தமிழ் சினிமாவில் கண்ணுக்குள் என்ற திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானார். மேலும் இவர் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய கொண்டார். காட் ஃபார் சேல், அமீபா, பிரேம சூத்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அனுமோல். 

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவரிடம் ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு நெட்டிசன்கள் சிலர் ஆபாச புகைப்படங்களையும் ஆபாசமான வார்த்தைகளைக் கொண்டு கமெண்ட் களையும் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். இதனால் கடுப்பான நடிகை அனுமோல் அவர்களைத் தொடர்ந்து பிளாக் செய்திருக்கிறார். நடிகை அனுமோல் ஆபாசமாக பேசிய நெட்டிசன்களை பிளாக் செய்த பின்பும் வேறு பெயர்களை பயன்படுத்தி மீண்டும் அந்த நெட்டிசன்கள் நடிகையை சீண்டி உள்ளனர். இதனால் கடுப்பான அவர் தற்போது புதிய பதிவு ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்கள் விளாசி இருக்கிறார்.

அதில் இதுபோன்ற வக்கிரம் பிடித்த அவர்களை நான் என்னதான் செய்வது.. உங்களை எத்தனை முறை நான் ப்ளாக் செய்வேன்.. மீண்டும் மீண்டும் புதிய பெயர்களை பயன்படுத்திக்கொண்டு ஆபாசமான புகைப்படங்களையும் கமெண்டுகளும் பதிவு செய்து வருகிறீர்கள். தயவுசெய்து இதோடு நிறுத்திக்கோங்க.. உங்களை பிளாக் பண்ணி பண்ணி நான் டயர்டாயிட்டேன். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் நீங்கள் ஈடுபட்டால் நான் சைபர் கிரைமில் புகார் அளிப்பேன் என்று கூறியிருக்கிறார். நடிகை வெளியிட்டுள்ள இந்த புதிய பதிவு சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.