மனைவியை விவகாரத்து பண்ணிட்டேன்..! அந்த பொன்ன ரெண்டாவதா கல்யாணம் பண்ணப்போறேன்..! பிரபல நடிகர் தடாலடி அறிவிப்பு!

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் செம்பன் வினோத் ஆவார். இவருடைய அசாத்தியமான நடிப்பிற்காக ரசிகர்கள் பலரும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இவர் ஹீரோ மற்றும் வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து தன்னுடைய பரிமாணங்களை மக்களுக்கு காட்டி ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார்.


நடிகர் செம்பன் வினோத் முதலில் சுனிதா என்ற பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்கின்றனர். இதனையடுத்து இருவரும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இதனை அடுத்து செம்பன் வினோத் தற்போது இரண்டாவதாக மனநல ஆலோசகரான மரியம் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இதனை பற்றிய தகவலை அவரே தன்னுடைய ரசிகர்களுக்கு சமூக வலைதளத்தின் மூலம் வெளியிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் செம்பன் வினோத் தற்போது பகத் பாசிலுடன் புதிய திரைப்படமொன்றில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு அவருக்கு சிறந்த நடிகர் விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.