கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட காதல் ஜோடி ஒன்று கடந்த சில காலமாக பிரிவை சந்தித்து மீண்டும் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தனை நாள் அரவணைத்த தொழில் அதிபருக்கு அல்வா! மீண்டும் அந்த நடிகருடன் ஜாய்ன்ட் அடித்த கொழுக் மொழுக் நடிகை! கோடம்பாக்கம் கிசுகிசு!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட காதல் ஜோடி இவர்கள்தான். இவர்கள் ஒன்றாக இருப்பதை அறிந்தாலே இவர்கள் காதல் கதையை தான் அன்றையதினம் ஹாட் டாப்பிக்காக வலம்வரும்.
இப்படி இருக்க திடீரென்று அந்த பிரபல நடிகை, இயக்குனர் ஒருவரால் பிரச்சினையில் சிக்கினார் . இதனை அடுத்து சிறிது காலம் தலைமறைவாக வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை தன் காதலருடன் கூடிய விரைவில் திருமண செய்தியை அறிவிப்பார் என்று இருந்த ரசிகர்கள் மத்தியில் இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த நடிகை திரை உலகை விட்டு விலகி இருந்தார்.
ஆனால் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அதேபோல் அந்த பிரபல நடிகையின் ரசிகர்களும் அவரை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
இதேபோல் அந்த பிரபல நடிகரும் தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் இவருக்கு சரியான வெற்றியை தரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இருப்பினும் அந்த நடிகர் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் மீண்டும் இவர்களுக்கு இடையில் காதல் மலர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது அந்த நடிகரும் நடிகையும் ஒரே வீட்டில் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டு வந்தது. திருமணமே ஆகாமல் இருவரும் ஒன்றாக வசித்து வருவது பற்றி கோலிவுட் வட்டாரத்தில் பலரும் கிசுகிசுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோல் சமீபத்தில் அந்த நடிகரும் நடிகையும் ஒன்றாக இணைந்து தயாரிப்பாளரின் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்திருந்தனர்.
அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு போது இருவருக்கும் தனித்தனியாக அறைகள் கொடுத்திருந்த போதிலும் இருவரும் ஒன்றாக ஒரே அறையில் இருந்து வந்ததும் சினிமா வட்டாரத்தில் பிரபலமாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ ..இம்முறையாவது இவர்களது திருமணம் நல்லபடியா நடந்து முடிந்தால் போதும் என்று இவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதனிடையே தமிழில் பிரச்சனை என்றதும் தெலுங்கு திரையுலகிற்கு சென்ற நடிகை அங்கு தொழில் அதிபர் ஒருவர் அரவணைப்பில் தான் இருந்துள்ளார்.
தற்போது அந்த தொழில் அதிபருக்கு அல்வா கொடுத்துவிட்டு மீண்டும் நடிகருடன் இணைந்துள்ளாராம். இதனால் அந்த தொழில் அதிபர் பார்ப்போரிடம் எல்லாம் நடிகைக்கு செய்த செலவு குறித்து புலம்பி வருகிறாராம்.