மறுபடியும் அவர் என்னை கூப்பிடுவார்..! மாஸ் ஹீரோவுடன் நெருங்க ஒல்லி மல்லு நடிகை போடும் பிளான்!

மறுபடியும் அந்த மாஸ் நடிகருடன் இணைந்து நடிப்பதற்காகவே பிரபல மல்லு நடிகை வித்தியாசமான பாணியில் பிறந்தநாள் வாழ்த்து கூறி இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கூறிவருகின்றனர்.


தமிழ் சினிமாவின் மாஸ் நடிகரின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய வண்ணம் இருந்தனர். ரசிகர்கள் மட்டுமல்லாது நடிகர் நடிகைகள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பிரபல ஒல்லி நடிகை, மாஸ் நடிகருக்கு வித்தியாசமான பாணியில் பிறந்தநாள் வாழ்த்து கூறியது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாக மாறியது.

ஏற்கனவே இந்த ஒல்லி நடிகை கொழு கொழுவென இருந்த பொழுது அந்த மாஸ் நடிகருடன் இணைந்து இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் பின்புலத்தை கொண்ட ஒரு திரைப்படத்திலும் கடவுள் பெயரில் திரைப்பட தலைப்பாக கொண்ட ஒரு திரைப் படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

ஏற்கனவே இரண்டு திரைப்படங்களில் மாஸ் நடிகருடன் நடித்த போதிலும் தற்போது மூன்றாவதாக மற்றொரு திரைப்படத்திலும் அவருடன் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி தான் இம்மாதிரியான செயலில் இவர் ஈடுபட்டிருக்கிறார் என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர். அதாவது அந்த ஒல்லி நடிகை மாஸ் நடிகரின் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு வயலின் வாசித்து பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார்

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் மாஸ் நடிகருக்கு ஐஸ் வைத்து வாய்ப்பு தேடுகிறார் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். கோலிவுட்டில் இழந்த உங்களுடைய மார்க்கெட்டை மீண்டும் பெறுவதற்காக ஐஸ் வைக்கிறீர்களா? என்றும் பலரும் அவரைக் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பப்ளியாக இருந்த தன்னுடைய உடல் எடையை குறைத்து உடல் மெலிந்து காணப்படுகிறார் அந்த ஒல்லி நடிகை. சமீபத்தில் அவருடைய நடிப்பில் வெளியான புதிய திரைப்படம் ரசிகர்களிடத்தில் பெரும் விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.