ஓவரா கண்டிசன் போட்டா, ஓடிப் போய்டுவேன்..! புதுக் கணவனை மிரட்டும் இளம் நடிகை! கோடம்பாக்கம் கிசுகிசு!

காதலிக்கும் போது சொன்ன சொல்லை திருமணத்திற்குப் பின்பு அவரது கணவர் மாற்றி பேசுவதால் நடிகை ஒருவர் தவித்து வருகிறார்.


தமிழ்சினிமாவில் பல நடிகைகளுடன் அதிகமாக கிசுகிசுக்கப்பட்டவர் இந்த நடிகர் தான். இந்த நடிகருக்கு எப்போது திருமணமாகும் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பாக தன்னை விட மிகவும் வயதில் இளைய பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

நடிகரின் மனைவி திருமணத்தின்போது விரலைவிட்டு எண்ணும் அளவிற்கான திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்திருந்தார். ஆகையால் திருமணத்திற்குப் பின்பும் உனக்கு பிடித்தாற்போல் படத்தில் நடித்துக் கொள் என்று முதலில் நடிகர் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் தற்போது நீ எவருடனும் ஜோடி சேர்ந்து நடிக்க கூடாது எனவும் நடித்தால் என்னுடன் மட்டும்தான் நடிக்க வேண்டும் எனவும் நடிகர் தன்னுடைய மனைவிக்கு கட்டளையிட்டுள்ளாராம்.

இதனால் கடுப்பான மனைவி நீங்கள் இவ்வாறு பேசினால் சட்டப்படி நாம் நீதிமன்றத்தில் பார்க்கலாம் என்று நடிகரை மிரட்டியுள்ளார். இதனையடுத்து நடிகர் அச்சத்தில் ஜெர்க் ஆகி விட்டார். எனவே தன் மனைவியிடம், நீ யாருடன் வேண்டுமென்றாலும் நடித்துக் கொள் என்று அனுமதி அளித்துள்ளார். 

இருப்பினும் தன் மனைவியுடன் எப்போது வேண்டும் என்றாலும் கருத்துவேறுபாடு நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால் நடிகர் சற்று கவனத்துடன் இருக்கிறார் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றது. இந்த சம்பவம் நடிகரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.