தன்னைவிட வயதில் மூத்த தமிழ் நடிகையை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை கற்பழித்து விட்டு தற்போது திருமணம் செய்து கொள்ள முடியாது என்று அவர் கூறியதை அடுத்து, அந்த நடிகை அவர்மீது போலீசில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னை விட வயதில் மூத்த தமிழ் நடிகையை கற்பழித்த நடிகர்! வீதிக்கு வந்த லிவ் இன் ரிலேசன் பஞ்சாயத்து!

சமீபகாலமாகவே திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்களை ஏமாற்றுவது என்பது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. இதற்கு சினிமா நடிகைகள் விதிவிலக்கல்ல. சமீபத்தில் தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகை ஒருவர் தன்னை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி கற்பழித்து ஏமாற்றி விட்டதாக புகார் அளித்திருந்தார். அதே போன்று தற்போது தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகை ஒருவரும் புகார் அளித்திருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட நடிகை ஒருவர் இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார் நடித்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த நடிகை தன்னோடு தரிசு நிலம் என்ற திரைப்படத்தில் நடித்த தியாகராஜன் (வயது 32) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நடிகை தியாகராஜன்-ஐ விட ஒரு வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தியாகராஜன் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவராவார். இவர்கள் இருவரும் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.
மணிக்கணக்காக எப்பொழுதுமே போனில் அந்த நடிகையுடன் உரையாடிக் கொண்டிருக்கும் தியாகராஜன், சமீபகாலமாக அவருடன் பேசுவதையே நிறுத்தி விட்டாராம். இதனால் அந்த நடிகைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திடீரென்று இதுநாள்வரை நெருங்கி பழகி வந்த அந்த நடிகையை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று தியாகராஜன் கூறியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் இனிமேற் பட்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் வந்து பேசினால், உன்னை கொலை செய்துவிடுவேன் என்றும் அவர் மிரட்டியதாக நடிகை மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னை நடிகர் தியாகராஜன் ஏமாற்றி விட்டதால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் போலீசிடம் கூறியிருக்கிறார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், நடிகர் தியாகராஜன் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உட்பட ஐந்து வழக்குகளை பதிவு செய்துள்ளனர். போலீசார் அவரை கைது செய்து விசாரித்த பொழுது, அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று தியாகராஜன் மறுப்பு தெரிவித்து இருக்கிறாராம். இந்நிலையில் போலீசார் அவரை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சம்பவம் தமிழ் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.