ஒல்லி பிச்சான் கடிச்ச பழத்தை இனி நான் சாப்பிட மாட்டேன்! விரல் நடிகர் எடுத்த சபதம்! அதிர்ச்சியில் நடிகைகள்!

தமிழ்சினிமாவில் பிரபல நடிகரான அந்த விரல் நடிகர் தன்னுடைய படங்களில் நடிப்பதற்காக ஹீரோயின்களை புதிய யுக்த்தியை பயன்படுத்தி தேர்வு செய்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


தமிழ்சினிமாவில் சிறுவயது முதலே நடித்து பிரபலமானவர் அந்த விரல் நடிகர். இவர் பொதுவாகவே மற்றொரு ஒல்லி நடிகரின் படத்தில் நடிக்கும் கதாநாயகிகளை தன்னுடைய படத்திற்கும் புக் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் தற்போது இந்த விரல் நடிகரின் பார்வை ஒல்லி நடிகரின் மீது இருந்து மாஸ் நடிகரின் மீது திரும்பியுள்ளது.

நம்முடைய வரலாற்றை வைத்து பார்க்கும்பொழுது கஜினி முகமது பல முறை படையெடுத்து வந்ததை அறிந்து இருப்போம். ஆனால் அவரையே மிஞ்சும் அளவிற்கு தமிழ் சினிமாவில் பல கம் பேக்குகளை கொடுத்தவர் இந்த விரல் நடிகர் ஆவார். இவர் ஏனோ தொடர்ந்து பல தோல்விகளை கண்டு வருகிறார். இதன் விளைவாக கடந்த ஆண்டு அவருடைய நடிப்பில் ஒரே ஒரு திரைப்படம் தான் வெளியானது.

ஆனால் இந்த விரல் நடிகர் தற்போது அரசியல் திரைப்படத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விரல் நடிகர் ஒல்லி நடிகரின் திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகிகளை தேர்வு செய்வதை விட்டுவிட்டு இஹம் மாஸ் நடிகரின் கதாநாயகிகளை தேர்வு செய்ய துவங்கி இருக்கிறார். ஒருவேளை இது அவருக்கு சற்று அதிர்ஷ்டத்தை தரும் என அவர் நம்புவதாகவும் கூறப்படுகிறது.

விரல் நடிகர் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வருவதால் ஒல்லி நடிகரை பின்பற்றுவதை விட்டுவிட்டு மாஸ் நடிகரை பின்பற்றுவதாக முடிவு செய்துவிட்டாராம். அதுமட்டுமில்லாமல் ஹாலிவுட் கதைகளை சுட்டு இயக்கும் பிரபல இயக்குனருடன் கைகோர்க்கிறார் இந்த விரல் நடிகர். எப்படியோ விட்ட தன்னுடைய இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் விரல் நடிகர் கடுமையாக முயற்சி செய்து வருவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.