கணவரை விவாகரத்து செய்துவிட்டு அவரது 20வயது மகனுக்கு மனைவியான நடுத்தர வயது பெண்! இது என்ன உறவு முறை?

ரஷ்ய நாட்டை சேர்ந்த சமூக ஊடகத்தின் மூலம் பிரபலமான பெண்ணாக வலம் வரும் மரினா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு அவரது மூத்த மகனை காதலித்து வருவதாகவும் அவரால் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தன்னுடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்.


மரினா பால்மசேவா என்ற பெண் ரஷ்ய நாட்டை சேர்ந்தவர். இவருக்கு வயது 35. இவர் அலெக்ஸி(வயது 45) என்பவரை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டிருந்தார். அந்த தம்பதியினர் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக இருந்து வந்த நிலையில் தற்போது விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இதனையடுத்து கணவரை விட்டுப் பிரிந்த மரினா, தனது கணவரின் மூத்த மனைவிக்குப் பிறந்த மகனுடன் வாழ்ந்துவருகிறார். 

இவரது கணவர் அது மூத்த மகன் பெயர் விலாடிமிர் (வயது 20). 35 வயதாகும் மாரினா தன்னுடைய மகன் ஸ்தானத்தில் இருக்கும் விலாடிமிர் உடன் காதலில் விழுந்துள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் மரினா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தின் மூலமாக தனது ரசிகர்களுக்கு செய்தி வெளியிட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தான் தற்போது விலாடிமிர் இன் குழந்தையை கருவில் சுமந்து கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் மரினா தன்னுடைய முன்னாள் கணவரான அலெக்ஸி உடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கடந்த பதிமூன்று வருடங்களுக்கு முன்பாக தானும் விளாடிமிரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் மரினாவை கடுமையாக சாடி வருகின்றனர்.. தற்போது இணையத்தில் மாறினா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தீயாக பரவி வருகிறது.