57 வயதில் இளைஞனுடன் செக்ஸ் ஆசை! விமானப்படை அதிகாரியின் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!

விமானப்படை முன்னாள் அதிகாரியின் மனைவி படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விமானப்படையின் முன்னாள் விங் கமாண்டரின் மனைவி மீனு ஜெயின் என்பவருக்கு 57 வயதாகிறது. இந்த வயதில் அவருக்கு இளைஞர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால் டேட்டிங் ஆப் மூலம் இளைஞர் ஒருவரை மீனு ஜெயின் தனது நண்பராக்கிக் கொண்டுள்ளார். தினேஷ் தீக்ஷித் என்பவருடன் பழகி அவ்வப்போது தனது ஆசையை மீனு நிறைவேற்றி வந்துள்ளார். 

கணவர் வீட்டில் இல்லாத நிலையில் தினேஷை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார் மீனு. அந்த இரவு மீனு ஜெயினை அளவுக்கு அதிகமாக மது அருந்த வைத்துள்ளார் தினேஷ். பிறகு இருவரும் உல்லாசம் அனுபவித்துள்ளனர். ஒரு கட்டத்தில் மீனு, சுயநினைவை இழந்தவுடன் அவரை கொலைச் செய்து 50 லட்சம் மதிப்புள்ள நகை,பணம் முதலியவற்றை சுருட்டிக் கொண்டு சென்றுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை காலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உடனே போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் , அவர் இறந்துவிட்டதாக கூறினர்.  விசாரணையில் தினேஷ் தீக்ஷித், தான் மீனுவை டேட்டிங் சைட்டின் மூலம் தெரிந்துக்கொண்டதாகவும், பலமுறை அவரை சந்தித்துள்ளதாகவும் கூறினார். தனக்கு இருமுறை கல்யாணம் நடந்துள்ளதாகவும் கூறினார்.

விமானப்படை முன்னாள் IAS அதிகாரியின் மனைவிக்கே இந்த துயரம் நடந்துள்ளதை கண்டு அந்தப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.