ரூ.800 கோடி பட்ஜெட்! விக்ரம், கார்த்தி! நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்! பொன்னியின் செல்வன் ஹாட் அப்டேட்!

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது .


கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று நாவலை திரைப்படமாகும்  திட்டத்தில் இயக்குனர் மணிரத்னம் இறங்கியுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரம் ,ஜெயம்ரவி ,கார்த்தி, அதர்வா போன்றமுன்னணி ஹீரோக்கள் முக்கிய ரோலில் நடிக்க உள்ளனர் .

நடிகை ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, அனுஷ்கா ,அமலாபால், கீர்த்திசுரேஷ் போன்ற முன்னணி நடிகைகளும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

மேலும் இந்த படத்தில் சத்யராஜ், பார்த்திபன், சரத்குமார் போன்ற நடிகர்களும் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .  மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது .

மேலும்  இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன . தமிழ் ,தெலுங்கு ,இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் பட்ஜெட் 800 கோடி எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .