மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தெய்வம் தந்த வீடு சீதாவுக்கு 2வது கணவன் ஆகும் பொன்மகள் வந்தாள் விக்கி..!தீயாய் பரவும் தகவலின் பின்னணி!

மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தெய்வம் தந்த வீடு சீதாவிற்கு இரண்டாவது கணவனாக போவதாக கூறப்பட்ட விக்கி இப்போது அதனை முழுவதுமாக மறுத்து தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.


சமீபகாலமாகவே சின்னத்திரை நடிகையான மேக்னா தனது கணவரை விவாகரத்து செய்த சம்பவம் பெரும் பரபரப்பாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை மேக்னா வும் பொன்மகள் வந்தாள் சீரியலில் தன்னோடு நடித்த விக்கி என்பவரை காதலித்து வருவதாகவும் விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல்கள் பரவி வந்தது. இதற்காக தான் மேக்னாவை போலவே விக்கியும் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார் எனவும் கூறப்பட்டது. தற்போது இந்த தகவலை முற்றிலும் பொய் என்று கூறி மறுத்து பேசி இருக்கிறார் நடிகர் விக்கி.

நடிகை மேக்னா தெய்வம் தந்த வீடு சீரியலில் சீதா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்களின் கொள்ளை கொண்டார். சீரியல் முடிவுக்கு வந்த பின்பு அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் சீரியல் நடிகர் விக்கிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இருவரும் ஒன்றாக ஜோடியாக நடித்திருந்த நிலையில் விக்கியும் அவரது மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். அதேசமயம் நடிகை மேக்னாவின் காதல் கணவரான டான் டோனியும் சமீபத்தில் விவாகரத்து பெற்று விட்டார். விவாகரத்து பெற்ற ஒரு வாரத்திலேயே டான் டோனி இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார்.

இதனை வைத்து நெட்டிசன்கள் பலரும் டான் டோனியை போலவே மேக்னாவும் நடிகர் விக்கியை திருமணம் செய்து கொள்வதற்காகத்தான் கணவரை விவாகரத்து செய்தாரோ என்று பேச ஆரம்பித்து விட்டனர். ஆனால் இந்த தகவல் முற்றிலும் பொய் என்று கூறி நடிகர் விக்கி தற்போது புதிய தகவலை வெளியிட்டிருக்கிறார். நானும் மேக்னாவும் சீரியலில் ஒன்றாக சேர்ந்து நடிக்கிறோம். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். எங்கள் இருவருக்கும் இடையில் நட்பை தவிர வேறு ஒன்றுமே இல்லை இதை ஏற்கனவே நான் தெளிவாக பலமுறை கூறியிருக்கிறேன். மேலும் எல்லா குடும்பத்தில் இருப்பது போலவே என்னுடைய குடும்பத்திலும் சில பிரச்சினைகள் உள்ளது அந்தப் பிரச்சினைகளை நான் பார்த்துக்கொள்கிறேன். 

அதுமட்டுமில்லாமல் எனக்கு ஆறு வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது நான் எல்லாவற்றையும் சமாளித்தாக வேண்டும். தயவு செய்து எங்களுடைய வாழ்க்கையைக் எடுக்காதீர்கள் என்று கூறியிருக்கிறார். அப்போது விக்கி வெளியிட்டுள்ள இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.