வடமாநிலங்களிலும் பொங்கல் கொண்டாட்டம்! களைகட்டும் பொங்கல் திருவிழா!

தமிழ்நாட்டைப் போலவே பொங்கல் விழா இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


ஆண்டுதோறும் தை 1ம் தேதி பொங்கல் விழாவாக நாம் அனைவரும் கொண்டாடி வருகிறோம் . இது தமிழர் திருநாள் என்று கணிக்கப்படுகிறது . இந்த தினத்தில் நாம் இயற்கைக்கு நன்றி கூறுவதே நம்முடைய வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இந்த பண்டிகையானது நம் மாநிலத்தில் பொங்கல் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது ‌.இதை போல் மற்ற மாநிலங்களில் எந்த பெயரில் கொண்டாடப்படுகிறது என்பதை இப்போது விரிவாக காணலாம்.

குஜராத் மாநிலத்தில் உத்திராயன் என்ற பெயரில் பொங்கல் விழாவானது கொண்டாடப்படுகிறது. இந்த உத்திராயன் விழாவின்போது அந்த இடமே விழாக்கோலம் போன்று காட்சியளிக்கும் அதுமட்டுமில்லாமல் இந்த உத்தராயன் விழாவை கொண்டாடுவதற்காக பல போட்டிகளும் நடைபெறுவது வழக்கம் .அந்த வகையில் அங்கு நடைபெறும் பட்டம் விடும் விழா காண்போரை கண்கவர் வைக்கும் விழாவாகும்.

பீகார் மாநிலத்தில் கிச்சடி என்ற பெயரில் இந்த பொங்கல் விழாவானது கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது பீகாரை சேர்ந்த மக்கள் வெல்லத்தை வைத்து உருண்டை செய்து அந்த இனிப்பை கதிரவனுக்கு படைப்பதை தங்களுடைய வழக்கமாக கொண்டுள்ளனர். 

நம்முடைய அண்டை மாநிலமான ஆந்திராவில் பொங்கல் விழாவானது சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவர்களும் நம்மைப் போலவே கதிரவனுக்கு நன்றி கூறும் விதமாக இனிப்புகளையும் பலவித பண்டங்களையும் படைத்து வணங்குவர். இவ்வராக பல மாநிலங்களில் பொங்கல் விழாவானது மிக சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.