பொன்.மாணிக்கவேல் நல்லவரா.. கெட்டவரா..?

பொன்.மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு செல்லும் என்று உச்ச நீதிமன்றம்குரல் கொடுத்திருக்கிறது. அப்படின்னா பொன்.மாணிக்கவேல் அவ்வளவு நல்லவரா... நீங்களே தெரிஞ்சுக்கோங்க...தமிழக அரசு பொன்.மாணிக்கவேலுக்கு பதவி தரக்கூடாது என்பதற்காக கடுமையாக போராடுகிறது. ஆனால், நீதிமன்றங்களோ, பொன்.மாணிக்கவேல் ரொம்பவும் நல்லவர் என்று சர்டிபிகேட் தருகிறது. உச்ச நீதிமன்றமும் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு உறுதி அளிக்கிறது.. அப்படி என்றால் உண்மையில் பொன்.மாணிக்க வேல் நல்லவரா, கெட்டவரா என்பதற்கு விடை தேடினோம்.

பொன்.மாணிக்கவேல் குறித்து சவுக்கு சங்கர் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரபூர்வமாக அவரது வலைதளத்தில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். அதற்கு பொன்.மாணிக்கவேலிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

அதேபோல் அவருடன் வேலை செய்யும் அதிகாரிகள் பலரும் கடுமையான டார்ச்சரை அனுபவிப்பதாக சொல்லிவருகிறார்கள். அதாவது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் தான் மட்டுமே பணியாற்றுவதுபோல் நடப்பதுகூட தவறு இல்லை, மற்ற அனைவரையும் மிருகம் போல அடிமைத்தனமாய் நடத்துகிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

அதேபோல் ஏழுவருடங்களாக சிலை கடத்தல் பிரிவில் இருந்தாலும், இத்தனை ஆண்டுகள் என்ன செய்தார். இந்த ஓர் ஆண்டு மட்டுமே அதிரடி நடவடிக்கை என்று சீன் போடுவது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார்கள். இதுவும் நியாயமான கேள்வியாகவே தெரிகிறது.

அடுத்து, தமிழக அரசு எதிர்த்துநிற்கும்போது, நீதிமன்றம் எப்படி பணி நீட்டிப்பு கொடுக்கமுடியும் என்ற கேள்வி எழுகிறது.

இந்தக் கேள்விக்குப் பின்னேதான் ஹெச்.ராஜா போன்ற ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் இருப்பதாக சொல்லப்படும் செய்தி உண்மையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அறநிலையத் துறை எதுவுமே சரியாக இயங்கவில்லை என்ற பொய்த் தோற்றத்தை உருவாக்கவே பொன்.மாணிக்கவேல் பாடுபடுகிறார் என்று சொல்வது கிட்டத்தட்ட உண்மைக்கு அருகே இருப்பதாகத் தோன்றுகிறது. அப்படியொரு நிலையை ஏற்படுத்தினால், கோயில்களுக்கு தன்னாட்சி அதிகாரம் கொடுத்து ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றிக்கொள்ளும்.

அப்படியொரு சூழலை நோக்கித்தான் பொன்.மாணிக்கவேல் நடவடிக்கைகள் இருக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இருப்பதை நீதிமன்றம் அறிந்து இப்படி உத்தரவு பிறப்பிக்கிறதோ என்பதையும் எண்ணத்தான் தோன்றுகிறது. அதுசரி, பொன்.மாணிக்கவேல் நல்லவரா, கெட்டவரா என்று கேட்கிறீர்களா?

அவரது மீசையைப் பார்த்தாலே உங்களுக்குப் பதில் கிடைக்கும்.