பொள்ளாச்சி வீடியோ! கயவர்களை பொத்திப் பொத்திப் பாதுகாக்கும் போலீஸ்! பின்னணியில் யார்?

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 பேர் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்ததாகக் கூறப்படும் பார் நாகராஜன் ஆகியோரை போலீசார் பொத்திப் பொத்தி பாதுகாப்பதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.


பொள்ளாச்சியில் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அந்த நான்கு பேர் மீது புகார் அளித்த பெண் சகோதரரை தாக்கியதாக அதிமுகவைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் கைது செய்யப்பட்டு உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி வீடியோ விவகாரத்தில் பார் நாகராஜனுக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பான புகார் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரை தனியாக பார் நாகராஜன் சந்தித்து தன்னுடைய குடும்பத்திற்குப் பாதுகாப்பு வேண்டும் என்று மனு அளித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியரும் அந்த பார் நாகராஜனின் மனுவை கனிவோடு பெற்று செய்தியாளர்களுக்கு போதும் வேறு கொடுக்கிறார்.

சாமானிய மக்களால் ஒரு தாசில்தாரை சந்தித்து கூட மனு கொடுக்க முடியாது. ஆனால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பார் நாகராஜன் கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்கிறார்.

இதன் மூலமே பார் நாகராஜனுக்கு பின்னணியில் பெரிய அரசியல் இருப்பது தெரியவருகிறது. இதேபோல் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு விசாரணையின்போது திருநாவுக்கரசை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் சட்டக்கல்லூரி மாணவர்கள் இளம் வழக்கறிஞர்கள் மற்றும் மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் நீதிமன்றத்தில் திறந்து திருநாவுக்கரசை அடித்து உதைக்க திட்டமிட்டனர்.

இதனைத் தெரிந்து கொண்ட போலீசார் திருநாவுக்கரசை நீதிமன்றத்திற்கு அழைத்து வரவே இல்லை. மாறாக திருநாவுக்கரசுக்கு என பிரத்யேகமாக வீடியோ கான்பரன்ஸ் ஏற்பாடு செய்து வீடியோ கான்பரன்ஸ் முறையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து உள்ளனர்.

அதாவது திருநாவுக்கரசு பொது மக்களிடம் சிக்கி அடி உதை வாங்க கூடாது என்பதற்காக போலீசே சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. பெண்களை கதற கதற சித்திரவதை செய்து வீடியோ எடுத்த ஒருவனை போலீசார் பொதுமக்களிடம் இருந்து இப்படி காப்பாற்ற வேண்டியது ஏன் என்று ஒரு கேள்வி எழுந்துள்ளது.

பெரிய அளவில் அரசியல் பின்புலமும் அரசியல்வாதிகளின் தொடர்பு இல்லாமல் திருநாவுக்கரசு போன்ற காமுகர்கள் இப்படி சிறப்பு வசதிகள் பெற முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.