பொள்ளாச்சி வீடியோ! என்கவுண்டருக்கு தயாராகும் போலீஸ்! திருநாவுக்கரசா? சபரிராஜனா?

தமிழகம் முழுவதும் பொள்ளாச்சி வீடியோ விவகாரம் பற்றி எரிந்து வருகிறது. அதிலும் இளம் பெண் ஒருவர் துடிக்க துடிக்க சித்திரவதை செய்யப்பட்டு வீடியோ எடுத்து வெளியிட்ட அந்த வீடியோவை பார்த்த பிறகு பெண்கள் பலரும் பதற்றத்தில் உள்ளனர். இத்தகைய கொடூர செயலை செய்தவர்களை சும்மா விடக்கூடாது என்பதுதான் அனைத்து வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் குடும்பத் தலைவர்களின் விருப்பமாக உள்ளது.


அதிலும் பொள்ளாச்சி விவகாரம் குறித்து பேசும் பெண்கள் அனைவருமே அந்த நான்கு பேரையும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். பொது மக்கள் மட்டுமல்லாமல் கல்லூரி மாணவிகளும் அந்த பொள்ளாச்சி கும்பலை சுட்டுக் கொல்லவேண்டும் என்று போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களாகவே தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் மாணவிகள் போர்க்கோளம் கொண்டுள்ளனர். தன்னெழுச்சியாக வகுப்பறைகளில் இருந்து வெளியே வந்து சாலையில் அமர்ந்து பொள்ளாச்சி காமுக கும்பலுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.

பொள்ளாச்சி வீடியோ விவகாரம் கொங்கு மண்டலத்தில் அதிமுகவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. நம் வீட்டுப் பெண்களை இப்படி வீடியோ எடுத்து அசிங்கப்படுத்திய அந்த நான்கு பேரையும் சும்மா விடக்கூடாது என்பதுதான் கொங்கு மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டில் உள்ள ஆண் மற்றும் பெண்ணின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்த தகவல் உளவுத் துறை மூலமாக சென்னை கோட்டையை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து தான் இந்த வழக்கு உடனடியாக சிபிசிஐடிக்கு பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சிபிஐ விசாரணைக்கு மாற்ற பட்ட பிறகும் சிபிசிஐடி போலீசார் மிகத் துரிதமாக இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளனர்.

பொள்ளாச்சி வீடியோ போன்ற கொடூர குற்றங்களை செய்தவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதை என்பது சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. சிறைச்சாலையில் இருக்கும் திருநாவுக்கரசை போலீசார் வெளியே கொண்டு வருவதே இந்த வழக்கில் பொதுமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காகத் தான் என்றும் கூறப்படுகிறது.

திருநாவுக்கரசு மூலமாக வாக்குமூலம் பெற்று மிச்சமுள்ள சதீஷ் sabari rajan வசந்தராஜன் ஆகியோரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணையின் போது தப்ப முயன்றதாகக் கூறி நான்கு பேரில் இரண்டு பேரை போட்டுத்தள்ள வேண்டும் என்கிற ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை போலீசார் எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்பதே பெரும்பாலான தமிழக மக்களின் ஆசையாக உள்ளது.