பொள்ளாச்சி பெண்கள் பாலியல் சம்பவம் தொடர்பு வழக்கு..! அதிமுக பிரமுகர் பார் நாகராஜன் விடுதலை! அதிர வைக்கும் ரிப்போர்ட்!

பெண்களை பாலியல் தொல்லை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய பொள்ளாச்சி சம்பவம் உடன் சம்பந்தப்பட்ட அடிதடி வழக்கு ஆதாரம் இல்லாததால் கைவிடப்படுவதாக சிபிஐ அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.


கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பொள்ளாச்சியில் நடைபெற்ற ஒரு சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது . அதாவது பல 100க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி ஆபாசமாக வீடியோ பதிவு செய்து அதனை வைத்து அவர்களிடம் இருந்து நகை, பணம் என கொள்ளை அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் நடைபெற்ற பின்பு கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி இதனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் . அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் அனைவருக்கும் தெரிய வந்தது. அதாவது இந்த பாலியல் வழக்கில் இளைஞர்கள் பலரும் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர்கள் அப்பாவி இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வலையில் சிக்க வைத்து உள்ளனர் என்றும் தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டது.

பின்னர் இந்த வழக்கு சிபிஐ கைக்கு மாறியது. இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த சிபிஐ பல திடுக்கிடும் தகவல்களை கண்டறிந்தனர். புகார் அளித்த அந்தப் பெண்ணின் சகோதரனை இந்த பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் தாக்கியதாக கூறப்பட்டது . இதனால் இவர்கள் மீது மற்றொரு வழக்கு பதிவாகியது. இந்த வழக்கின் விசாரணையும் சிபிஐ மேற்கொண்டு வந்தது. மேலும் இந்த அடிதடி வழக்கில் வழக்கில் பாபு, செந்தில், வசந்தகுமார் , மணிவண்ணன் ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

தற்போது சிபிஐ விசாரித்து வரும் இந்த வழக்கில் ஆதாரங்கள் எதுவும் கிடைக்காததால் முன்னேற்றம் காணாமல் இருக்கிறது . ஆகையால் சிபியை இந்த வழக்கை கைவிட போவதாக அறிவித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது அன்றைய தினம் இந்த வழக்கிற்கான இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்ட மற்றொரு வழக்கு வரும் 5ம் தேதி நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் பல மாற்றங்களும் திருப்பு முனைகளும் ஏற்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.