பொள்ளாச்சி பாலியல் வழக்கு! மக்கள் எழுச்சியை அடக்கத்தான் சி.பி.ஐ. விசாரணையா?

டெல்லி நிர்பயா விவகாரத்தைவிட கொடுமையான பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தின் கொடுமையைக் கேட்டு, அத்தனை தமிழர்களுக்கும் ரத்தம் கொதித்தது.


அதிசயமாக தமிழகத்தின் அத்தனை கட்சிகளும் ஒன்று சேர்ந்து உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தன. போலீஸ் திடீரென இந்த விவகாரத்தில் பதுங்கியது. மொத்தமே நான்கு வீடியோக்கள் மட்டுமே இருக்கிறது, அத்தனை பெரிய தவறு எதுவும் இல்லை என்று சப்பைக்கட்டு கட்டியது. இந்த நேரத்தில்தான், பொள்ளாச்சி மற்றும் கோவை ஏரியாவில் சமீபத்தில் நடந்த அத்தனை பெண்கள் தற்கொலை குறித்தும் விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அதுதவிர, விபத்தில் செத்துப்போன இளம் பெண்கள் பற்றிய விவகாரமும் தூசு தட்டப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஏன், இப்படி கோரிக்கை எழுகிறது என்பதற்குப் பின்னால் பொள்ளாச்சி ஜெயராமனின் வாரிசுகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

அதாவது, 2016ம் ஆண்டு பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் ஒரு காரில் சுரேகா, மந்த்ரா, பெரியநாயகி, சுவேதா போன்ற பெண்களுடன் பயணம் போனார். அப்போது ஏற்பட்ட விபத்தில் சுரேகா இறந்துவிட்டார். இந்த விவகாரத்தைத்தான் இப்போது எதிர்க் கட்சியினர் தட்டி எழுப்புகிறார்கள். அந்தப் பெண்கள் எல்லாம் யார்? அந்தப் பெண்கள் அனைவரும் மாணவிகள் என்று சொல்லப்பட்டது உண்மையா? அவர்கள் அனைவரும் தவறான நோக்கத்தில் அழைத்துச்செல்லப் பட்டவர்களா என்பதை எல்லாம் விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

இந்த விவகாரம் பெரியதாக கிளம்புவதைப் பார்த்து எடப்பாடி அப்செட் ஆகிப்போனார். ஏனென்றால், கொங்கு பெல்ட் மட்டும்தான் அ.தி.மு.க. பலமாக இருக்கிறது. அங்கேயும் ஆளும் கட்சியின் அராஜகத்தால் பெண்களுக்குக் கொடுமை நடந்திருப்பது தெரியவந்தால் ஓட்டு வங்கி ஒட்டுமொத்தமாக காணாமல் போய்விடும். அதனாலே, உடனே வழக்கை சி.பி.ஐ.க்குத் தள்ளிவிட்டார்.

அதாவது தேர்தல் முடியும் வரையிலும் இந்தப் பிரச்னையைத் தள்ளிப்போட்டால் போதும். அதன்பிறகு ஏதேனும் செய்துகொள்ளலாம் என்பதுதான் திட்டமாம். 

உண்மையான குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட்டால் சரிதான்.