பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் ஆளும்கட்சி தாமாக சிபிஐ விசாரணை அமைத்ததன் மூலம் மத்திய அரசின் துணையோடு தப்பித்துக்கொள்ள நினைக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு
பொள்ளாச்சி கொடூரம்! மத்திய அரசு துணையோடு குற்றவாளிகளை காப்பாற்றவே சிபிஐ விசாரணை! சற்று முன் வெளியான ஷாக் தகவல்!

விடுதலை சிறுத்தைகள் தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் திராவிட விடுதலைக் கழகம் சார்பாக ஐநா வை ஏமாற்றி நீதியின் பிடியிலிருந்து தப்ப முயலும் இலங்கை தூதரகத்தை தமிழகத்திலிருந்து வெளியேறக்கூறி நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் திருமாவளவன் மற்றும் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்
ஐநா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 25 முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த கூட்டத்தொடரில் வருகிற மார்ச் 20 ம் தேதி ஈழத்தமிழர் சிக்கல் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. எனவே இந்திய அரசு சிங்கள இன வெறி அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது மேலும் புலனாய்வு நடத்த கால நீட்டிப்பு கூடாதென்றும் அதற்கு இந்திய அரசு துணைபோகாமல் கால நீட்டிப்பு வழங்குவதை இந்திய அரசு தடுக்க வேண்டும்.
குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும் என்றார் மேலும் அங்கு நடைபெறும் புலனாய்வு நடவடிக்கைகளை ஐ நாவிற்கு சமர்பிக்க பன்னாட்டு பொறிஞர்கள் வல்லுனர்கள் அடங்கிய அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் மேலும் ஆறு மாதகங்களுக்கு ஒரு முறை விசாரணை விவரங்களை ஐநாவிடம் சமர்ப்பிக்க ஆணையிட வேண்டும் என்று அதற்கு இந்திய அரசு ஐநாவில் குரல் கொடுக்க வேண்டும் மேலும் இன அழிப்பு தடயங்களை அழிக்கும் முயற்சியில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது அந்த தடயங்களை அழிய விடாமல் பன்னாட்டு பொறிமுறை அமைக்க வேண்டும் என்றார்.
மேலும் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் ஆளும்கட்சி தானாகவே சிபிஐ விசாரணை கூறியிருப்பதன் மூலம் மத்திய அரசின் துணையோடு தப்பித்துக் கொள்ள நினைக்கிறது அதுபோன்ற நடவடிக்கைகள் கடந்த காலங்களில் நடந்துள்ளது ஆகவே காவல்துறை கண்காணிப்புடன் கூடிய விசாரணை வேண்டும் என்றார். இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.