ராமதாஸ் வீட்டில் காடுவெட்டி குரு சாப்பாட்டில் விஷம்! குரு சகோதரி வெளியிட்ட திகில் தகவல்!

பாட்டாளி மக்கள் கட்சி பணத்திற்காக பதவிக்காக சேர்ந்த கூட்டணிதான் என காடுவெட்டி குரு குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.


சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்  சந்தித்த காடுவெட்டி குரு சகோதரி மீனாட்சி மற்றும் மகன் கனல் அரசன் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர், அப்போது பேசிய அவர்கள், தங்கள் குடும்பதினருக்கு பாமக நிறுவனர்  ராமதாஸ் அவர்களால் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தனர்.

பாமக அதிமுக கூட்டணியில் வைத்த 10 அம்ச கோரிக்கைகளில் வன்னியர் சமுதாய முன்னேற்றத்திற்க்கு ஏதும் இல்லை என கூறிய அவர்கள் பாமக பணத்திற்க்காக பதவிக்காக சேர்ந்த கூட்டணி தான் என குற்றம்சாட்டினர். தங்கள் குடும்பத்தை அழிக்கவே அதிமுகவுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளதாகவும்,வன்னியர் சமுதாயத்திற்காக என்ன செய்தார்கள் என ராமதாஸ் கூற முடியுமான என கேள்வி எழுப்பினர்.

காடுவெட்டி குரு உயிருடன் இருக்கும் போதே பாமக வில் பனிப்போர் நடந்ததாக தெரிவித்த அவர்கள், காடுவெட்டி குரு  மரணம் மருத்துவ கொலை என குற்றம்சாட்டினர். நாடாளுமன்றம் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு கேட்டால் அளிக்க தயாராக இருப்பதாகவும், வன்னியர் சமுதாயம் முழுவதுமாக  ராமதாஸ் அவர்களுக்கு ஆதரவு இல்லை என கூறினர்.

அன்புமணியின் வளர்ச்சிக்கு காடுவெட்டிகுரு இடைஞ்சலாக இருந்ததால் ராமதாஸ்,அன்புமணி ஆகியோர் காடுவெட்டிகுருவை புறக்கணித்தார்கள் என தெரிவித்தனர்.  தங்களுடைய குடும்பத்தினருக்கு அரசு மற்றும் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறினர். மேலும் ராமதாஸ் வீட்டிற்கு சென்று சாப்பிட்டு விட்டு வந்த பிறகு தான் குருவுக்கு உடல் நிலை மோசமானதாக அவரது சகோதரி கூறியுள்ளார்.

குருவுக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவரது சகோதரி மீனாட்சி கூறியுள்ளார். மேலும் மருத்துவமனைக்கு வந்த ராமதாஸ் மற்றும் அன்புமணியிடம் குரு சண்டை போட்டதாகவும், அப்போது என் உயிர் வேண்டும் என்றால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று குரு வேதனையுடன் தெரிவித்ததாகவும் மீனாட்சி கூறினார்.