இனி வாய் பேசாது! வெளியே வந்தவர்கள் பைக்குகளை அடித்து நொறுக்கி ரெய்டு போன போலீஸ்! தருமபுரி பதற்றம்!

ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்காத  இருசக்கர வாகன ஓட்டிகளின் வாகனங்களை காவல்துறையினர் அடித்து நொறுக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 59,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 11,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதிலும் 2300 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 157 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 57 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுள் அதிகபட்சமாக சென்னையை சேர்ந்தவர்கள் 81 பேர் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கும் மீறுவோருக்கு நூதனமான தண்டனைகளை காவல்துறையினர் வழங்கி வருகின்றனர். இருப்பினும் பொறுப்பற்ற வகையில் சிலர் இருச்சக்கர வாகனங்களில் சென்று ஊரடங்கை சீர்க்குலைக்கின்றனர் என்பதால் காவல்துறையினர் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் தருமபுரியில் வரம்பு மீறி வரும் பொதுமக்களை காவல்துறையினர் கடுமையாக தண்டித்து வருகின்றனர். ஊரடங்கை மீறும் பொதுமக்கள் மீது காவல்துறையினர் லத்தியால் வாகனங்களை அடித்து நொறுக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

காவல்துறையினரின் அறிவுரைகளை மீறி வெளியே சுற்றும் கூட்டம் இனியாவது குறையும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.