ஊரடங்கு விதிகளை மீறியதாக காவல்துறையினர் கைது செய்த தந்தை மற்றும் மகன் சிறையிலேயே உயிரிழந்த சம்பவம் குறித்து பிரபல சீரியல் நடிகை வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என் அண்ணனுக்கும் போலீசால் இப்படித்தான் நடந்தது..! கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கதறிய செம்பருத்தி சீரியல் நடிகை! என்னாச்சு?

தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் என்ற இடம் அமைந்துள்ளது. இங்குள்ள சந்தை பகுதியில் ஜெயராஜ் என்பவர் செல்போன் கடை நடத்தி வந்தார். ஊரடங்கு காலத்தில் அவருக்கு துணையாக அவருடைய மகன் பெனிக்ஸ் இமானுவல் செயல்பட்டு வந்துள்ளார். 19-ஆம் தேதி இரவன்று ஊரடங்கு நேரத்தில் விதிகளை மீறி சில நிமிடங்கள் அதிகமாக கடையை இயக்கியதற்காக ஜெயராஜை ஆய்வாளர் கைது செய்து அழைத்து சென்றனர்.
தந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்கின்றனர் என்ற தகவல் கிடைத்தவுடன் பென்னிக்ஸ் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் பென்னிக்ஸையும் கைது செய்தனர். கைது செய்த பின்னர் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளாக நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகள் நேரடியாக ஆஜர் படுத்தப்படுவதில்லை. ஆதலால் ஜெயராம் மற்றும் அவருடைய மகனால் தாங்கள் தாக்கப்பட்டது குறித்து கூற இயலவில்லை. தாக்குதல் நடத்திய பிறகு அவர்களுக்கு எந்த ஒரு சிகிச்சையும் அளிக்கப்படுவதில்லை.
வலியால் துடிதுடித்து சன் நெக்ஸ்ட் நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவிலும், ஜெயராஜ் நேற்று அதிகாலை 4:30 மணியளவிலும் உயிரிழந்தனர். அவர்களுடைய உடல்கள் தற்போது பாலயங்கோட்டை மருத்துவக் கல்லூரியிலுள்ளன. இந்நிலையில் நேற்று ஜெயராஜின் மனைவி நீதிமன்றத்தில் மனு ஒன்று அளித்திருந்தார்.
அதாவது, "இருவரின் பிரேத பரிசோதனையையும் 3 மருத்துவர்கள் அடங்கிய குழு மேற்கொள்ள வேண்டும். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனமானது நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை ஏற்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இந்நிலையில் ஜெயராஜ் உறவினர்கள் அவர்கள் காவல்துறையினரால் கொடுமைப்படுத்தப்பட்ட உயிரிழந்தனர் என்று குற்றம் சுமத்துகின்றனர். ஜெயராஜ் மகன் பெனிக்ஸின் ஆசனவாயுவில் லத்தியை வைத்து காவல்துறையினர் குத்தியதால் மட்டுமே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது என்று கூறியுள்ளனர்.
இருவரின் மறைவானது தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்கள், திரையுலகத்தினர் பலர் இந்த சம்பவத்திற்கு எதிராக தங்களுடைய கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
அவ்வகையில் பிரபல சீரியல் நடிகையான ஜனனி அசோக்குமார், கண்ணீர் மல்க சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். "மிருகங்கள் தான் இதுபோன்ற மனிதநேயமற்ற செயல்களில் ஈடுபடும். நான் அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பது இல்லை. சமூக வலைத்தளங்களில் கூட கொஞ்சம் நாள் நான் ஈடுபடவில்லை. நீண்ட நாட்கள் கழித்து இன்றுதான் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நுழைகிறேன். நுழைந்தவுடன் இந்த துயரத்தை கண்டு தாங்கிக்கொள்ள இயலாமல் வீடியோவை வெளியிடுகிறேன்.
அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாயிட் கொலை செய்யப்பட்டதற்கு காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். அதுவே மிகவும் குறைவான தண்டனை. அதுபோல இங்கு இல்லையே. என்னால் என்னுடைய அழுகையை கட்டுப்படுத்த இயலவில்லை. ஏனெனில் என்னுடைய வாழ்விலும் இதுபோன்ற துயரமான சம்பவம் அரங்கேறியது.
என்னுடைய அண்ணன் இறந்த பிறகு அவருடைய உடலை பெற்றுக் கொள்வதற்கு காவல்துறையினர் எங்களிடம் பணம் கேட்டு மிரட்டினர். அப்போது நான் மிகவும் சிறியவளாக இருந்தேன். என்று தான் இது போன்ற மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் கிடைக்குமோ" என்று பதிவிட்டிருந்தார்.
வீடியோவை பார்த்து அவருடைய ரசிகர்கள் அவரை சமாதானப்படுத்தி வருகின்றனர். இவருடைய வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.