ஊரடங்கில் ஊர் சுற்றும் இளம் கன்னியர்கள்..! போலீசாரிடம் சிக்கியதால் நடு ரோட்டில் ஏற்பட்ட சங்கடம்! எங்கு தெரியுமா?

முழு ஊரடங்கை பொருட்படுத்தாமல் ஊர் சுற்றி வரும் இளைஞர்களுக்கு காவல்துறையினர் பல்வேறு நூதன தண்டனைகளை வழங்கி வரும் செய்தியானது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 43,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 8,80,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நம் நாடு முழுவதிலும் சமூக விலகலை கட்டாயமாக்குவதற்காக முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முழு ஊரடங்கை பொருட்படுத்தாமல் அத்தியாவசிய வேலைகள் இருப்பதாக கூறி தேவையின்றி பல இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றி திரிகின்றனர். ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடின்றி இரு பாலர்களும் இத்தகைய அலட்சியமான செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

அவர்களை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து பலவகையான நூதன தண்டனைகளை கொடுத்து வருகின்றனர். பாடி, பட்டாபிராம், நசரத்பேட்டை ஆகிய சென்னையின் புறநகர் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு காவல்துறையினர் பல வகையான உடற்பயிற்சிகளை கற்றுக்கொடுத்தனர். அதுமட்டுமன்றி தவளை ஓட்டம், காவல்துறையினருக்கு பிரத்தியேகமாக வழங்கப்படும் பயிற்சிகள் ஆகியவற்றையும் இவர்களுக்கு கற்றுக்கொடுத்தனர்.

அவர்களை இறுதியாக கொரோனா வைரஸுக்கு எதிரான ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தருவேன் என்றவாறு உறுதிமொழி எடுக்க வைத்தனர். காவல்துறையினர் இவ்வளவு பொறுமையாக இருப்பதை பார்த்து மக்கள் வியப்படைகின்றனர். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.