அழகிகளை வைத்து விபசாரம் நடத்தி வந்த குற்றத்திற்காக 2 பெண் புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளது கோயம்புத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா அழகிகள்..! கோவையை கலக்கும் சாலை ஓர விபச்சாரம்..! வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதியாகும் பெண்கள்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு பகுதிக்குட்பட்ட கணபதி என்ற இடத்தில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தன. ரகசியமாக சம்பந்தப்பட்ட இடத்தில் இயங்கி வந்த மசாஜ் சென்டருக்கு காவல்துறையினர் சாதாரண உடையில் சென்றுள்ளனர்.
மசாஜ் சென்டரில் 2 அழகிகளை வைத்து விபச்சாரம் நடந்து வருவதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மசாஜ் சென்டரில் அக்ஷை என்ற இளைஞரை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அக்ஷை தன்னுடன், புஷ்பா பாலாஜி விஷ்ணு ஆகிய 3 மூன்று பேருக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார்.
கேரளாவை சேர்ந்த 22 வயது இளம்பெண்னையும், கோயம்புத்தூரை சேர்ந்த 23 வயது இளம்பெண்னையும் மசாஜ் சென்டரில் வைத்து விபச்சாரம் நடத்தி வந்ததற்காக அக்ஷய காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள புஷ்பா, பாலாஜி, விஷ்ணு ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அழகிகளின் மீட்டு காவல்துறையினர் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதேபோன்று கோவில்பாளையம் காவல்துறையினருக்கு சரவணம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடந்து வருவதாக தகவல்கள் கிடைத்தன. சாதாரண உடையில் அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினருக்கு, அங்கு சுற்றித்திரிந்து வந்த ஒரு பெண் மீது சந்தேகம் எழுந்துள்ளது. பின்னர் அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அந்த பெண் சென்னையை சேர்ந்த சாந்தி என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இவருடன் ஜான் வில்லியம்ஸ் மற்றும் வேணி ஆகிய இருவரும் இணைந்து ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். 3 விபச்சார அழகிகளை மீட்டெடுத்த காவல்துறையினர் அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர். தலைமறைவாகியுள்ள ஜான் வில்லியம்ஸ் மற்றும் வேணியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இவ்விரு சம்பவங்களும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.