காதலியை கர்ப்பமாக்கி காதலன் செய்த விபரீதம்! பிறகு அரங்கேறிய தரமான சம்பவம்! என்ன தெரியுமா?

காதலித்த பெண்ணை ஏமாற்ற நினைத்த காதலனை கண்டித்து காவல்துறையினர் இருவருக்கும் திருமணம் செய்து வைத்த சம்பவமானது ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் முனிசிபல் சத்திரம் அமைந்துள்ளது. இங்கு பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஜோதி என்ற பெண்ணும் வசித்து வருகிறார். இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது.

இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தனர். பின்னர் ஆசை வார்த்தை கூறி ஜோதியை ஏமாற்றி பார்த்திபன் உல்லாசம் அனுபவித்தார். 5 மாத கர்ப்பிணியாக ஜோதி இருக்கும் நிலையில், அவரை திருமணம் செய்துகொள்ள பார்த்திபன் மறுத்துவிட்டார்.

இதுகுறித்து ஜோதி அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். ஜோதி தன் குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூரம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இவர் அளித்த புகாரின் அடிப்படையில் அப்பகுதி காவல்துறையினர் இருவீட்டாரையும் அழைத்து ஆலோசனை நடத்தினர்.

அனைவரும் சமரசம் அடைந்த நிலையில், காவல் நிலையத்தின் எதிரே உள்ள கோவிலில் பார்த்திபன் மற்றும் ஜோதி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

மணமக்களை மனதார வாழ்த்தி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வானது சூரம்பட்டி பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.