எனக்கு 14 வயதில் இருந்து இப்போது வரை உல்லாசமாக இருந்தார்..! போலீஸ்காரர் மீது பிளஸ் ஒன் மாணவி கூறிய பகீர் புகார்!

வேலியே பயிரை மேய்ந்தால் போல, 16 வயது சிறுமியை காவல்துறை அதிகாரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவமானது அரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தர்மபுரி மாவட்டத்தில் அரூர் என்ற இடம் அமைந்துள்ளது இதற்கு உட்பட்ட கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் 16 வயது இளம்பெண். இவன் தன்னுடைய குடும்பத்தினருடன் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்துவிட்டார். அங்காள ஒரு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் விடுமுறையில் குடும்பத்தினருடன் சொந்த கிராமத்திற்கு வந்துள்ளனர். இவர்களுக்கு தர்மபுரி மாவட்டத்திலுள்ள சேஷம்பட்டியில் வெற்றிவேல் என்ற 27 வயது உறவினர் இருந்துள்ளார். இவர் அந்த 16 வயது இளம்பெண்ணுக்கு திருமண ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதற்கிடையே வெற்றிவேலுக்கு காவல்துறையில் பணி கிடைக்க கோயம்புத்தூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தார். கோயம்புத்தூர் மாவட்டத்திலும் அவர் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் நிச்சயமாக திருமணம் செய்து கொள்வதாக கூறி, பலமுறை உடலுறவு வைத்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், 6 அவர்களுக்கு முன்னர் வெற்றிவேலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் சேஷம்பட்டியில் திருமணம் நடைபெற்றதாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக தன்னுடைய பெற்றோருடன் சென்று நிகழ்ந்தவற்றை கூறி நியாயம் கேட்டுள்ளார். 

அப்போது வெற்றிவேல் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்ள இயலாது என்று கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த மாணவியின் பெற்றோர் அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகாரளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வெற்றிவேலிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது வெற்றிவேல் ஆசைகாட்டி பாதிக்கப்பட்ட மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது உண்மை என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக காவல்துறையினர் வெற்றிவேலை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதுமட்டுமின்றி இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த வெற்றிவேலின் தாயார் மகேஸ்வரி, சகோதரர் பத்மநாபன் மற்றும் உறவினர் சுரேஷ் ஆகியோரிடமும் கலைத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது அரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.