ஒரே வருடத்தில் 500 மான்கள் வேட்டை! சேலத்தை மிரட்டு காட்டுக் கும்பல்! அதிர வைக்கும் தகவல்!

சேலம் மாவட்டத்து வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட குற்றத்திற்காக 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


சேலம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ஏராள கணக்கான மான்கள் வசித்து வருகின்றன. சமூகவிரோதிகள் சிலர் லைசென்ஸ் பெற்ற துப்பாக்கிகள் மூலம் மான்களை சுட்டு வேட்டையாடி அவற்றின் கொம்புகள், தோள்கள் முதலியவற்றை கோடீஸ்வரர்களுக்கும், நட்சத்திர ஹோட்டல்களுக்கும் விற்பனை செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

இதனால் நாளுக்கு நாள் மான்களின் எண்ணிக்கை வனத்தில் அதிக அளவில் குறைந்து கொண்டே போனது. காவல்துறையினர் கலந்தாலோசித்த பிறகு உதவி காவல்துறை ஆணையரின் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து மான் வேட்டையை கண்காணிக்க திட்டமிட்டனர்.

மாறுவேடம் அணிந்து வனப்பகுதியை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். அங்கு மறைந்திருந்து கண்காணித்தபோது வான் வேட்டையாடும் குழுவின் தலைவன் லோகேஸ்வரன் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் 20 கிலோ மாட்டிறைச்சியை எடுத்துக்கொண்டு வந்தார். காவல்துறையினர் அவரை மடக்கி கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் முன்னேறிச் சென்று பல இடங்களில் சோதித்தபோது ஓரமாக இருந்த இன்னோவா காரில் பதுங்கியிருந்த லக்ஷ்மணனிடம் 15 கிலோ மான் இறைச்சி இருப்பதை கண்டறிந்துள்ளனர். லட்சுமணனையும் கைது செய்தனர். 

அந்த வனத்தில் அதிக அளவில் மான் புழங்கும் இடங்களை அறிந்த வனத்துறை அதிகாரிகளின் உதவியால் காவல்துறையினர் விரைந்து சென்று சோதனை நடத்தினர். கைது செய்யப்பட்ட லோகநாதன் மற்றும் லக்ஷ்மணனை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவர்கள் இதுவரை 500 மான்களுக்கு மேல் வேட்டையாடி உள்ளதாக கூறியுள்ளனர்.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி மேலும் 2 பேருக்கு இதில் சம்பந்தம் உள்ளது என்பதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். பூபதி ஹரி மற்றும் மான் மணி ஆகிய இருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தனிப்படை அமைத்து 24  மணிநேரத்திற்குள்ளேயே மான் வேட்டை ஆடும் குழுவின் 2 முக்கிய உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்து இருப்பதை அப்பகுதி மக்கள் மனதார பாராட்டி வருகின்றனர். இந்த சம்பவமானது சேலம் மாவட்டத்தை வனப்பகுதியில் சிறிது பதற்றத்தை ஏற்படுத்தியது.