கர்ப்பமா இருந்தாலும் ஓடுவோம் சார்..! ப்ளீஸ் அக்செப்ட் பண்ணுங்க..! கெஞ்சிய கர்ப்பிணிகள்! ரிஜக்ட் செய்த போலீஸ் அதிகாரி! கலங்க வைக்கும் சம்பவம்!

திருச்சியில் நடைபெற்ற காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வில் கர்ப்பிணிப் பெண்கள் 5 பேரை அதிகாரிகள் தேர்வில் இருந்து நீக்கம் செய்துள்ளனர்.


திருச்சியில் உள்ள சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் சார்பில் பெண்களுக்கான காவலர் தேர்வு நடைபெற்று வருகிறது. 

பெண்களுக்கான உடல் தகுதி தேர்வை கண்காணிப்பதற்காக திருச்சி மாவட்ட டிஜிபி பாலகிருஷ்ணன் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் பெரம்பலூர் எஸ்பி நிஷா பார்த்திபன் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். உடல் தகுதி தேர்வை சந்திப்பதற்காக ஏராளமான பெண்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் முதற்கட்டமாக 700 பெண்களை தேர்வுக்காக அழைத்துள்ளனர்.

அழைக்கப்பட்ட 700 பெண்களில் 634 பெண்கள் மட்டும் உடற்தகுதி தேர்வில் பங்கேற்பதற்காக திருச்சியில் உள்ள சுப்பிரமணியம் ஆயுதப்படை மைதானத்தில் வந்திருந்தனர். இந்த 634 பெண்களின் 5 பேர் கர்ப்பிணி பெண்கள் என்பது குறிப்பிடதக்கது.

தேர்வுக்காக வந்த அனைத்து பெண்களது பள்ளி சான்றிதழ் முதலில் சரிபார்க்கப்பட்டது. அதன் பின்பு அவர்களது உடல் எடை , உயரம் ஆகியவையும் கணக்கிடப்பட்டது. இதனை தொடர்ந்து ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

 உடற்தகுதி தேர்வுக்காக வந்த ஐந்து பெண்களை அதிகாரிகள் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து ஐந்து பேரும் கண்ணீர் மல்க அதிகாரிகளிடம் வாய்ப்பு அளிக்குமாறு கேட்டனர்.

ஆனால் அதிகாரிகளும் அந்த 5 கர்ப்பிணி பெண்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் வாய்ப்பை தர மறுத்தனர். நீண்ட நேரமாக அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த ஐந்து கர்ப்பிணிப் பெண்களும் வாய்ப்பு கிடைக்காததால் தங்களது வீட்டிற்கு திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் திருவானைகாவலை எனும் இடத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் உடல்தகுதி தேர்வில் பங்கேற்பதற்காக வந்திருந்தார். அப்போது அவரது உயரம் குறைவாக இருக்கிறது என்று அதிகாரிகள் நிராகரித்து விட்டனர்.

இதனைத்தொடர்ந்து அந்த பெண் தொடர்ந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அருகிலிருந்த டிஜிபி அவர்களிடம் தான் சரியான உயரம் தான் இருப்பதாகவும் தன்னை உடற்தகுதி தேர்வில் பங்கேற்க அனுமதிக்க மறுக்கிறார்கள் எனவும் முறையிட்டார்.

பின்னர் டிஜிபி-ன் கண்ணெதிரே எலக்ட்ரானிக் மெஷின் மூலம் அந்தப் பெண்ணின் உயரம் அளவீடு செய்யப்பட்டது . அப்போது அந்தப் பெண் அனுமதிக்கப்பட்ட சரியான உயரத்தை கொண்டுள்ளார் என்று தெரியவந்தது . உடனே அதிகாரிகள் அவரை தேர்வு எழுதுவதற்கு அனுமதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.