கரை புரண்ட வெள்ளம்! கழுத்தளவு தண்ணீர்! தலையில் கூடை! உள்ளே பச்சிளம் குழந்தை! நெகிழ வைத்த போலீஸ்காரர்!

கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள குஜராத் மாநிலத்தில் காவல்துறை அதிகாரியொருவர்  கைக்குழந்தையை தலையில் சுமந்து காப்பாற்றியுள்ள வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


குஜராத் மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. பல இடங்களில் கழுத்து அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் முக்கிய நகரங்களில் ஒன்றான வதோதராவில் சில தினங்களாக பேய் மழை அடித்து வந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்திய பேரிடர் அமைப்பினர் உதவிக்காக அழைகப்பட்டுள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல காவல்துறையினரும் இந்திய பேரிடர் மீட்பு அமைப்பினரும் ஒருசேர போராடி வருகின்றனர். 

வதோதரா காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் கோவிந்த் சவுடா. இவர் பிறந்து 45 நாட்களேயான குழந்தையை பிளாஸ்டிக் கூடையில் வைத்து தலையில் சுமந்து காப்பாற்றியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை குஜராத் மாநிலத்தின் கூடுதல் டி.ஜி.பியான ஷம்செர் சிங் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் அந்த காவல்துறை அதிகாரியை மனமுவந்து பாராட்டியுள்ளார்.

இந்த வீடியோயாவது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பொதுமக்கள் காவல்துறை அதிகாரி ஷம்செர் சிங்கை பாராட்டி வருகின்றனர்.