வெளிநாட்டில் உழைக்கும் இளைஞரின் மனைவியை அபேஸ் செய்த எஸ்ஐ! வீடியோவில் கதறும் கணவன்!

கள்ளக்காதல் கலாச்சாரம் நம் தமிழகத்தை சீரழித்துக்கொண்டுவருகின்றது. ஒரு நாளில் கிட்டத்தட்ட 4 அல்லது 5 செய்திகள் கள்ளக்காதலை பற்றி கேள்விப்படும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.


ஆனால் புகழ்பெற்ற காவல்துறை அதிகாரி இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கின்றது. கேரள மாநில அரசால் பெரிய அளவிற்கு கௌரவிக்கப்பட்டவர் மோஹன ஐயர். இவர் கன்னியாகுமரியில் நடந்த சபரிமலை போராட்டத்தின் போது சிறப்பாக செயல்பட்டதற்க்காக கேரளா அரசு இவரை கௌரவித்தது. இவர் தற்போது உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

குமரி மாவட்டத்தில் களியக்காவிலையை என்னும் பகுதி அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள சூரியக்கோடு பகுதியை சேர்ந்தவர் சோமன் என்பவர். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். ஆண்டுக்கு ஒருமுறை தான் இவர் இந்தியாவிற்கு வருகிறார். இந்நிலையில் இவர் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்.

அதில் தனது மனைவியை களியக்காவிளையை சேர்ந்த உதவி ஆய்வாளரான மோகன் அய்யர் அபகரித்து வைத்துள்ளதாகவும், இதனால் தான் தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார். தனது மனைவியை தன்னுடன் அனுப்புமாறு கோரினால் தன்னை உதவி ஆய்வாளர் ஐயர் மிரட்டுவதாகவும் அவர் கதறுகிறார்.