புது மனைவியை தவிக்கவிட்டு சிறுமியை 8 மாத கர்ப்பமாக்கிய போலீஸ்காரர்! திருவண்ணாமலை பரபரப்பு!

இளம்பெண்ணை காவல்துறையினர் கர்ப்பமாக்கிய சம்பவமானது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் வெரையூர் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு மணிகண்டன் என்பவர் தச்சம்பட்டு காவல்நிலையத்தில் பணியாற்று வருகிறார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மணலூர்பேட்டை என்னும் பகுதியை சேர்ந்த விமலா என்ற 25 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான சில மாதங்களிலேயே மணிகண்டனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. 

ஒரு கட்டத்தில் விமலா அப்பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பவம்குறித்து புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் மணிகண்டன் மீது சுமத்தப்பட்ட குற்றம் உண்மையானது என்றும், தொடர்பில் இருந்த வேறொரு சிறுமியை 8 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

மகளிர் காவல் துறையினர் மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.