2 கைகளையும் இழந்த குரங்கிற்கு கைகளாகி பசி ஆற்றிய காவல்துறை அதிகாரி..! நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ உள்ளே!

கொரோனாவால் உணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்ட குரங்கிற்கு காவல் ஆய்வாளர் ஒருவர் வாழைப்பழம் வழங்கிய வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 1,54,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 22,48,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஊரடங்கினால் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள் கூட பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா தலங்களிலும், மலைப்பகுதிகளிலும் வாழும் விலங்குகளுக்கு அவ்வழியே செல்லும் சுற்றுலாவாசிகள் உணவளிப்பது வழக்கம். ஆனால் தற்போது ஊரடங்கின் காரணமாக மக்கள் யாரும் வெளியே அனுமதிக்கப்படாத காரணத்தினால் விலங்குகளை பாதுகாப்பதற்கு யாராலும் இயலவில்லை.

சமீபத்தில் கன்னட நடிகர் ஒருவர் 500க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு உணவளித்த செய்தியானது சமூகவலைதளங்களில் வைரலானது. அதுபோன்ற தன்னார்வலர்கள் பலர் விலங்குகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், 2 கைகளையும் இழந்த குரங்கு ஒன்று இருக்கும் காவல்துறை ஆய்வாளர் வாழைப்பழம் ஊட்டிவிடும் புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது காவல்துறை அதிகாரி ஒருவர் தன் இருக்கையில் அமர்ந்தபடி தொலைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது குரங்கு ஒன்று அவருடைய அருகில் அமர்ந்திருந்தது. அந்த குரங்கு 2 கைகளும் இல்லாமல் இருப்பதை உணர்ந்த காவல்துறை அதிகாரி தன் கையால் வாழைப்பழத்தை உரித்து குரங்கிற்கு ஊட்டி விடுகிறார். இந்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்த்த பலரும் இது போன்ற மனிதர்களின் ரூபத்தில் இன்னும் மனிதநேயம் உலகில் இருப்பதாக கூறியுள்ளனர்.