உறவுக்காரப் பெண்ணை மனைவியாக்கிய மூன்றே மாதத்தில் போலீஸ்காரருக்கு ஏற்பட்ட பகீர் நிலை..! அதிர்ச்சி காரணம்!

திருமணமான 3 மாதங்களிலேயே புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுச்சேரியில் மேரி உழவர்கரை என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட சிவசக்தி நகர் என்ற இடத்தை சேர்ந்தவர் பாலாஜி. பாலாஜியின் வயது 35. இவர் புதுச்சேரி காவல்துறையில் ஐ.ஆர்.பி பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். தற்போது அவருக்கு வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவில் பணி அளிக்கப்பட்டிருந்தது.

பாலாஜிக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதியன்று, உறவுக்காரப்பெண் ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் தன்னுடைய பணிக்கு சென்றுள்ளார். பணிக்கு சென்ற அவர் நள்ளிரவு 1 மணிக்கு வீட்டிற்கு செல்வதாக கூறி காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளார்.

கோரிமேடு காவல் மைதானத்தின் வாகன பிரிவு அலுவலகத்தின் முன் இருந்த ஒரு மரத்தில் தூக்கிட்டு பாலாஜி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மறுநாள் காலையில் பாலாஜி மரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பாலாஜி உடலை மீட்டெடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதுமட்டுமின்றி தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது பணிச்சுமை காரணமாக பாலாஜி தற்கொலை செய்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது மேரி உழவர்கரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.