துப்பாக்கி காட்டி 10 வயது சிறுமியை தடவிய 57 வயது சப் இன்ஸ்பெக்டர்

வில்லிவாக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமியை, துப்பாக்கி காட்டி ஏமாற்றி தடவிய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் போக்சா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


பெண் குழந்தைகளை பாலியல் கொடுமையில் இருந்து காப்பாற்ற வேண்டிய காவல் துறையே, சிறுமிகளை சீரழிக்கும் கொடூர காரியம் செய்ததைக் கண்டு அதிர்ந்து நிற்கிறது காவல் துறை.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் வாசு, மாதவரம் பால் பண்ணை காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வயது 57 என்று சொல்லப்படுகிறது.  நேற்றிரவு அவர் தங்கியுள்ள வில்லிவாக்கம் ஜகநாதபுரம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். தன்னிடம் இருந்த துப்பாக்கியைக் காட்டி, இதைப் பார்க்க வேண்டுமா என்று கேட்டுள்ளார்.

போலீஸ் துப்பாக்கியைப் பார்த்தவுடன் ஆசையுடன் அந்த சிறுமி அவர் வீட்டுக்குள் போயிருக்கிறார். உள்ளே சென்ற சிறுமியிடம் தன்னிடம் இன்னொரு துப்பாக்கி இருக்கிறது என்ற ரீதியில் பேசி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி கதறி அழுத சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்ததும், உதவி ஆய்வாளர் வாசு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

 சிறுமியிடம் நடந்ததை கேட்டு அதிர்ந்த பொதுமக்கள்  உடனே அ வரை விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இருப்பினும் காவல் துறையினர் புகார் ஏதும் பெறாமல், வழக்கும் பதிவு செய்யாமல் விட்டுவிட்டனர்.

இந்தத் தகவல் தெரியவந்ததும் பொதுமக்கள் ஆவேசமானார்கள். உயர் அதிகாரிகளுக்கு தகவல் பறந்த்து. உடனடியாக  பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், விசாரணை நடத்தவும் உத்தரவிட்டனர்.

 இதையடுத்து பாதிக்கபட்ட சிறுமியிடம் காவல் நிலைய குழந்தை நல அலுவலர் மூலம் விசாரணை நடத்தியதில் கடந்த 4 மாதமாக சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பல சிறுமிகளை இதேபோன்று தனது அறைக்கு அழைத்துச்சென்று மிரட்டி பாலியல் கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது. 

அதனால் சப் இன்ஸ்ப்கெடரைப் பிடித்து  விசாரணை செய்த வில்லிவாக்கம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர். காவல் துறையில் இப்படிப்பட்ட கருப்பு ஆடுகள் இருப்பதுதான் கேவலம்.