திருமணம் செய்யாமல் சுஷாந்த் சிங்குடன் ஒரே வீட்டில் வாழ்ந்த நடிகை! 9 மணி நேர போலீஸ் விசாரணையில் வெளியான உண்மை!

சுஷாந்த்தும் நானும் ஒன்றாக இருந்தோம் என்றும் நாங்கள் இருவரும் வரும் நவம்பரில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து இருந்தோம் எனவும் நடிகை ரியா சக்ரபோர்த்தி போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.


பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் திரைத்துறையினர் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் நெஞ்சங்களில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அவரது நண்பர்கள் மத்தியிலும் திரைத்துறையினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் போலீசில் கூறியுள்ளனர். இதனையடுத்து போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 

சுஷாந்த்க்கு நிகழ்ந்தது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் தங்களுடைய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நடிகர் சுஷாந்த் உடன் வைத்து கிசுகிசுக்கப்பட்ட நடிகை ரியா சக்ரபோர்த்தியை போலீசார் சுமார் ஒன்பது மணி நேரம் விசாரித்துள்ளனர். விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை தானும் சுஷாந்த்தும் ஒன்றாக இருந்து உள்ளனர் என்றும் வரும் நவம்பரில் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்ததாகவும் நடிகை ரியா ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் சண்டையிட்டு பிரிந்து விட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். 

மேலும் அவர்கள் இருவரின் செல்போன்களை ஆராய்ந்த பொழுது, அதில் இருவரும் செய்துகொண்ட சாட் மற்றும் பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை போலீசார் கண்டறிந்துள்ளனர். இருவரும் சண்டையிட்டு பிரிந்து இருந்த நிலையிலும் சுல்தான் தினம் தோறும் இரவு நேரத்தில் நடிகை ரியாவிடம் பேசி வந்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. நடிகை ரியா உட்பட போலீசார் இதுவரை 13 பேர் களிடம் தங்களுடைய தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் மேலும் சிலரிடமும் விசாரிக்க உள்ளனர். தற்போது இந்த தகவலானது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.