சோதனைச்சாவடியில் மர்ம நபர்களால் ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாள் இரவில் எல்லாம் மாறிப்போச்சு..! சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்ஐ தந்தை உடலை பார்த்து கதறிய மகன் - மகள்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

நாகர்கோவில் மாவட்டத்தில் களியக்காவிளை எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள படந்தாலுமூடு எனுமிடத்தில் சோதனைச்சாவடி இயங்கிவந்தது. இந்த சோதனைச்சாவடியில் வில்சன் என்ற காவல் ஆய்வாளர் பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று முன்தினம் மர்மநபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவருடைய மனைவியின் பெயர் ஏஞ்சலா மேரி. இத்தம்பதியினருக்கு ரெஜினா, வினிதா என்று 2 மகள்கள் உள்ளனர். ரெஜினாவுக்கு திருமணம் முடிந்து விட்டது. வினிதா சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் வீட்டிலேயே தங்கி வருகிறார்.
வில்சன் இறந்த செய்தியை அறிந்தவுடன் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இன்று காலை ஆய்வாளர் வில்சனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.