நடு ராத்திரி நடுச் சாலையில் பிரசவ வலி! துடித்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து 2 உயிர்களை காப்பாற்றிய பெண் இன்ஸ்பெக்டர்! குவியும் பாராட்டு!

நிறைமாத கர்ப்பிணிக்கு காவல்துறை ஆய்வாளர் பிரசவம் பார்த்த சம்பவம் அனைவரையும் நெகிழ செய்துள்ளது.


சென்னையில் சூளைமேடு எனும் பகுதி அமைந்துள்ளது. இத்பகுதிக்கு உட்பட்ட சௌராஷ்டிரா நகரில் பானுமதி என்ற பெண் வசித்து வருகிறார். இவர் நிறைமாத கர்ப்பிணியாவார். நேற்று அதிகாலை கணவர் இல்லாத நேரத்தில் பானுமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 

தனக்கு உதவி செய்ய யாரும் இல்லாததால் பானுமதி தானாகவே பிரதான சாலைக்கு வந்து வாகனம் பிடிக்க முயற்சித்தார். ஆனால் வலி அதிகமானதால் அவர் நிலைகுலைந்து சாலையோரத்தில் கீழே விழுந்தார்.

அப்போது வழக்கமாக அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளும் சித்ரா என்ற காவல்துறை ஆய்வாளர் பானுமதியை கண்டுள்ளார். அருகிலிருந்த பெண் துப்புரவு பணியாளரின் உதவியுடன் சித்ரா பானுமதிக்கு பிரசவம் பார்த்தார்.

பிரசவத்தில் பானுமதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சித்ரா 108 ஆம்புலன்ஸை வரவழைத்து தாயையும்,சேயையும் ஒப்படைத்தார். தற்போது இருவரும் மருத்துவமனையில் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் சித்ராவின் துரிதமான செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிகழ்வானது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.